சுதாகருக்கு ஃபோன் போட்ட சுந்தரவல்லி, புனிதா சொன்ன வார்த்தை, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ!!
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவுக்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.
நேற்றைய எபிசோடில் அம்மாச்சி புனிதா மற்றும் ரஞ்சிதாவிற்கு சாப்பாடு போட்டு கொண்டு இருக்க சிங்காரம் சந்தோஷமாக வந்து ஐயா கிட்ட விஷயத்தை பேசிட்டேன் உடனே ஐயா அதுக்கு என்ன ஊரு அனுப்பி வைக்கிறேன் சந்தோஷமா கொண்டாடுங்கள் என்று சொல்லிவிட்டார் என்பதை சொன்னவுடன் குடும்பத்தினர் அனைவரும் சந்தோஷப்படுகின்றனர். ரஞ்சிதா உண்மையதான சொல்றீங்க என்று சொல்ல அக்கா மட்டும் இல்ல கூட சின்னையாவும் சேர்ந்து வராரு என்று சொல்ல, அப்போ அவங்க எல்லாம் வந்தா பிரச்சனை ஆகுமே என்று சொல்லுகின்றனர். உடனே சிங்காரம் அவங்க யாரும் வரல சின்னையா நந்தினியும் மட்டும் தான் வராங்க என்று சொல்ல அப்போ வீடெல்லாம் சுத்தம் பண்ணனும் ஏற்பாடு பண்ணனும் என்று பேசிக்கொண்டு இருக்க ரஞ்சிதாவிற்கு நந்தினி போன் போட்டு எல்லோரும் சந்தோஷமா பொங்கல் வைக்கலாம் என்று பேசிக்கொள்ள புனிதாவும் போன் வாங்கி பேசுகிறார்.
சூர்யா தம்பியும் வராரு போல என்று சொல்ல, ஆமா அம்மாச்சி நான் மட்டும்தான் போறேன்னு சொன்னேன் ஆனா ஐயா தான் ரெண்டு பேரும் போயிட்டு வாங்க என்று சொன்னார் என்று சொல்ல புனிதாவும் ரஞ்சிதாவும் எனக்கு இது வேணும் அது வேணும் என்று கேட்க சரி எல்லாம் வாங்கிட்டு வரேன் என்று சொல்லி போனை வைக்கிறார். ரூமில் சுந்தரவல்லி தனியாக இருக்க மாதவி சூர்யாவும் நந்தினியும் ஊருக்கு போறாங்கன்னு கேள்விப்பட்டேன் என்று சொல்லுகிறார். தெரியும் என்று சுந்தரவல்லி சொன்ன தெரிஞ்சுக்கிட்டே அமைதியா இருக்கீங்களா என்று கேட்கிறார். அவங்க ரெண்டு பேரும் ஜோடியா போறாங்களேன்னு வருத்தப்பட்டு உங்ககிட்ட சொல்ல வந்தேன் என்று சொல்லுகிறார். உடனே சுந்தரவல்லி போகும்போது ஜோடியாகவே போகட்டும் வரும்போது சூர்யா மட்டும் தனியா தான் வருவான் நான் பாத்துக்கிறேன் என்று சொல்லுகிறார்.உடனே மாதவி எப்படி என்று கேட்க நீங்க யாரு எதுவும் பேசாதீங்க எதுவும் பண்ண வேணாம் எல்லாத்தையும் நானே பார்த்துக்கொள்கிறேன் கிளம்பு என்று அனுப்புகிறார்.
உடனே மாதவி சுந்தரவல்லி சொல்லியதை நினைத்து யோசித்துக் கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து அசோகன் மற்றும் சுரேகா வருகின்றனர். என்னக்கா டென்ஷனா இருக்க என்று சொல்ல சூர்யாவும் நந்தினியோ தல பொங்கல் கொண்டாட ஊருக்கு போக போறாங்க என்று விஷயத்தை சொல்ல போனா போகட்டும் விடு அக்கா என்று சொல்லுகிறார். அது பிரச்சனை இல்ல அங்க நந்தினியை வர விடாம சூர்யா மட்டும் வர வைக்க பிளான் போட்டுக்கிட்டு இருக்காங்க. போகவிடாமல் தடுக்க ஏதாவது பிளான் வச்சிருக்கீங்களா என்று கேட்க, ஏதாவது யோசிக்கணும் நந்தினி திரும்ப வந்தே ஆகணும் என்று பிளான் பண்ணி அதை சுரேகா மற்றும் அசோகனிடம் சொல்லுகிறார். மறுநாள் காலையில் நந்தினி ரெடி ஆயிட்டோம் ஐயா என்று சொல்ல கார்ல டிரஸ் எல்லாம் இருக்குமா எல்லாருக்கும் கொடு என்று சொல்லுகிறார். சூர்யாவையும் பத்திரமா பாத்துக்கோமா என்று சொல்ல, ஐயா நான் அம்மாகிட்ட ஊருக்கு போயிட்டு வரேன்னு சொல்லட்டுமா என்று சொல்ல அவ எப்ப நல்ல வார்த்தை சொல்லி இருக்கா உனக்கு ஊருக்கு போகும்போது கஷ்டம் தான் வரும் என்று சொல்ல நந்தினி கேட்காமல் சுந்தரவல்லி இடம் சொல்ல உள்ளே வருகிறார். நந்தினி பார்த்தவுடன் சுந்தரவல்லி கோபப்பட, நான் ஊருக்கு போயிட்டு வரேன்னு சொல்றதுக்காக தான் வந்தேன் என்று சொல்ல, போ ஆனா திரும்ப வராத உன் உடம்புல சூடு சொரணை இருந்தா அங்கே இருந்திரு திரும்ப மட்டும் வந்துடாத என்று திட்ட அருணாச்சலம் வா என்று கூப்பிடுகிறார். நான்தான் அவகிட்ட எதுவும் சொல்ல வேணாம்னு சொன்ன இல்ல, சரி எல்லாத்தையும் மறந்துட்டு நீ போய் சந்தோஷமா பொங்கல் வெச்சு கொண்டாடுங்க நீங்க போய் பேக் எடுத்துட்டு வந்துட்டு கிளம்புங்க என்று சொல்லுகிறார்.
அருணாச்சலம் உட்கார்ந்து காபி குடித்துக் கொண்டிருக்க மாதவி நந்தினி சூர்யாவும் ஊருக்கு கிளம்பிட்டாங்களா என்று கேட்கிறார். இப்பதான் கிளம்ப போறாங்க என்று சொன்ன இல்லப்பா இட்லி பொடி அரைச்சு வைக்க சொன்னேன். அதை அரைச்சு வச்சுருக்காங்களா இல்லையா என்று கேட்டேன் என்று சொன்ன நந்தினி சமைக்கிற சாப்பாடு மட்டும் பிடிக்கும் ஆனா நந்தினி பிடிக்காது என்று சொல்ல அப்படி எல்லாம் ஒன்னும் இல்லப்பா என்று பேசிக் கொண்டிருக்க சூர்யாவும் நந்தினியும் கிளம்பி கீழே வருகின்றனர்.
மாதவிடாய் மாப்பிள்ளையும் சுரேகாவும் எங்க என்று சொல்ல இருவரும் வேலையாக வெளியே போயிருக்காங்க என்று சொல்ல சரி நீங்க கிளம்புங்க என்று சொல்ல, கல்யாண வந்தவுடன் அட்டைப்பெட்டி எல்லாம் வச்சுட்டியா என்று சொல்ல அப்பவே வச்சுட்டேன் என்று சொல்லுகிறார்.என்ன பா அது என்று கேட்க டிரஸ் எல்லாம் வாங்கி இருக்கேன் மா என்று சொல்ல உடனே மாதவி இங்கு யாருக்கும் பொங்கல் டிரஸ் எடுக்கல அதுக்குள்ள அங்க பார்சல் ஆயிடுச்சா என்று மனதுக்குள் நினைக்கிறார். எனக்கு இருவரும் வந்து அவர்களை வழி அனுப்புகின்றனர். நந்தினி சந்தோஷமாக இருப்பதை பார்த்து ஊருக்கு போன உடனே இவ்வளவு சந்தோஷப்படுற என்ன பண்ணுவ அங்க போய் என்று கேட்கிறார். கிராமத்தில் வயல் ஆறு மரம் செடி என அனைத்தையும் எவ்வளவு மிஸ் பண்ண ஆயிரம் தான் இருந்தாலும் பொறந்த மண் ஐயோ பெத்த தாயையும் யாரால மறக்க முடியும் என்று கேட்கிறார்.இந்த சொந்தக்கார இந்த ஊரு இதெல்லாம் வந்து என்னால ஏத்துக்கவே முடியல. எனக்கு அதெல்லாம் புரியவே புரியாது என்று சொல்லுகிறார்.
நீங்க ஏன் எந்த ஒரு சொந்தத்தை மேலயும் புரிதல் இல்லாம இருக்கீங்க என்று சொல்ல அதற்கு சூர்யா ஆங்கிலத்தில் என்ன அமைதிக்கு பின்னாடி ஒரு கதை இருக்கும் என்று சொல்லுகிறார் உடனே நந்தினி என்ன சார் சொல்றீங்க என்று சொல்ல அதெல்லாம் ஒன்னும் இல்ல எனக்கு டாடியை மட்டும் தான் பிடிக்கும் வேற யார் மேலயும் எனக்கு அஃபெக்ஷன் வராது என்று சொல்லுகிறார். இந்த கான்வர்சேஷன் எதுக்கு இவ்வளவு சீரியஸா போகணும் ஜாலியா பேசலாம் என்று சொல்லி உனக்கு என்ன பாட்டு பிடிக்கும் என்று சொல்லு என்று சொல்ல, உங்க இஷ்டம் சார் என்று சொல்ல நந்தினி பாட்டு போடுகிறார். ஜாலியா இரு என்ஜாய் பண்ணு என்று சொல்ல நந்தினியும் சந்தோஷப்படுகிறார்.
இன்று வெளியான ப்ரோமோவில் சுந்தரவல்லி சுதாகருக்கு ஃபோன் போட்டு திரும்பவும் சென்னைக்கு வரும்போது என் பையன் மட்டும்தான் வரணும் என்று சொல்லுகிறார்.உடனே சுதாகர் அவ எங்க போற எங்க வர யாரை பார்க்கிறாய் எல்லாத்தையும் நோட் பண்ணுங்க என்று சொல்லுகிறார்.
நந்தினி துணி பேக்குகளை எடுத்து வைத்துக் கொண்டிருக்க இதே அந்த வீட்டு பொம்பளைகளா இருந்தா கிழிஞ்ச துணியை கூட கொடுத்து இருக்க மாட்டாங்க என்று சொல்லுகிறார். என்ன நடக்கப்போகிறது என்று எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.