பாக்கியாவை திட்டி தீர்க்கும் ஈஸ்வரி, கோபிக்கு எதிராக எடுக்கப் போகும் முடிவு என்ன? இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!
பாக்யாவை ஈஸ்வரி திட்டி சாபம் கொடுத்துள்ளார்.
தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பாக்யாவிற்கு கோர்ட்டில் இருந்து நோட்டீஸ் வருகிறது. கோபி மீது கொடுத்த கேசின் காரணமாக நாளைக்கு கோர்ட்டுக்கு வர சொல்லுகின்றனர். இதனால் ஈஸ்வரி நீ இன்னும் கேச வாபஸ் வாங்கலையா அவனுக்கு எவ்வளவு பெரிய ஆப்பரேஷன் நடந்திருக்கு வருத்தப்படக்கூடாது மன அழுத்தம் ஆகக்கூடாது என்று சொல்லி இருக்காங்க ஆனா இப்படி மனசாட்சியே இல்லாமல் நடந்துக்குற என்று கோபப்படுகிறார்.
உடனே கோபி பாக்யாவை எதுவும் சொல்லாதீங்க அம்மா எல்லாம் என்னோட தப்பு தான் எந்த தண்டனை கொடுத்தாலும் நான் ஏத்துக்குறேன் என்னால இந்த வீட்ல பிரச்சனை மறுபடியும் வேண்டாம் என்று சொல்லிவிட்டு மேலே சென்று விடுகிறார். ஈஸ்வரி பாக்கியா விடம் என் கண்ணீருக்கு ஒரு மதிப்பே இல்லையா என்று கேட்க அன்னைக்கு பிரியாணி விஷயத்துல அம்மா கண்கலங்கி நின்னாங்க எல்லாரும் அடிக்க பாய்ஞ்சுகிட்டு வந்தாங்க அன்னைக்கு அம்மா சிந்தன கண்ணீருக்கு யாரு பதில் சொல்றது என்று கேட்க எதுவும் பேசாமல் அமைதியாக நிற்கிறார் பாக்யா. பிறகு ஒவ்வொருவராக மேலே சென்று விட பாக்யா எழில் மற்றும் அமிர்தா மூவரும் பேசிக் கொண்டிருக்கின்றனர் நாளைக்கு எந்த டைம் போகணும் என்று கேட்க பத்து மணிக்கு என்று பாக்யா சொல்லுகிறார் உடனே ஈஸ்வரி அங்கு வந்து நீ முன்ன மாதிரி இல்ல காசு வந்த உடனே மாறிட்ட உனக்காக கோபி சப்போர்ட் பண்ணி பேசுறான் அவன் திருந்தி இப்ப நல்லவனா இருக்கா ஆனா உன்னால அதை கூட ஏத்துக்க முடியாது இல்ல என் நாளைக்கு அவனுக்கு ஏதாவது தண்டனை கொடுத்தாங்கன்னா என்னால தாங்க முடியாது.
நான் செத்து போயிடுவேன் அவனை ஜெயிலுக்கு அனுப்பிச்சு விட்டு என்னையும் சுடுகாட்டுக்கு அனுப்பிடுங்க என்றெல்லாம் பேசி அழுதுவிட்டு ஈஸ்வரி சென்று விடுகிறார். மறுபக்கம் கோபி ரூமில் தனியாக உட்கார்ந்து கொண்டிருக்க ராதிகா வந்தவுடன் என்னை நாளுக்கே ஜெயில்ல போற்றுவாங்கள நாலு அஞ்சு வருஷம் ஜெயில்ல இருக்கணும்ல இனியாவோட கல்யாணம் மயூ ஓட ஹையர் ஸ்டடிஸ் எவ்ளோ பிளான் பண்ணி வச்சிருந்தேன் உங்க ரெண்டு பேரு வேற இங்க விட்டு இருக்கேன் என்றெல்லாம் பேச ஏன் கோபி இவ்ளோ டென்ஷன் ஆகுறீங்க அதெல்லாம் ஒன்னும் ஆகாது அதெல்லாம் பிரச்சனை இல்லாம பாத்துக்கலாம் நான் உங்களுக்காக ஒரு வக்கீல ரெடி பண்ணி இருக்க அவரு தமிழ்நாட்டிலேயே மிகப்பெரிய வக்கீல் என்று சொல்லி ஆறுதல் சொல்லுகிறார். உங்களுக்கு ஒரு வைஃபா யோசிக்கும்போது உங்களோட உடம்பு நலமைய வச்சு தான் வக்கீல் அரேஞ்ச் பண்ணி இருக்கேன் ஆனா ஒரு சக மனுசியா பார்க்கும்போது நீங்க பண்ணது மிகப்பெரிய தப்பு கோபி என்று சொல்ல அந்த கோவம் என்ன கண்ண மறைச்சிடுச்சு நான் இப்படி இவ்வளவு பெரிய தப்பு பண்ணனு எனக்கே தெரியல பாக்யாவுக்கு நான் இவ்ளோ பண்ணியும் அவ என் உயிரை காப்பாத்திருக்கா எனக்கு அது செருப்பால அடிச்ச மாதிரி இருந்தது குற்ற உணர்ச்சிலை தினம் தினம் செத்துகிட்டு இருக்கேன் என்றெல்லாம் பேசுகிறார். சரி நீங்க தூங்குங்க என்று சொல்ல எனக்கு எப்படி தூக்கம் வரும் என்று கேட்கிறார் கேச பத்தி யோசிக்காதீங்க எதுவா இருந்தாலும் பாத்துக்கலாம் நான் வரன் கூட என்று சொல்ல கோபியும் சரி என சம்மதிக்கிறார்.
மறுநாள் காலையில் ஈஸ்வரி சாமி கும்பிட்டுக் கொண்டிருக்க பாக்யா கிட்சனின் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார் உடனே பாக்யாவை பார்த்தவுடன் எப்படி கல்நெஞ்ச காரியா இருக்கா பாரு என்று இனியாவிடம் சொல்லி திட்டுகிறார். மேலே இருந்து ராதிகாவும்,கோபியும் கீழே இறங்கி வர ஈஸ்வரி கோபியை கட்டிப்பிடித்து அழுகிறார். கோபி அவருக்கு ஆறுதல் சொல்ல கோர்ட்டுக்கு நாங்களும் வருகிறோம் என்று சொல்லுகிறார் வேணாமா நீங்க யாரும் வர வேணாம் நானும் ராதிகாவும் மட்டும் போறோம் என்று சொல்ல அவள் எல்லாம் தேவையில்லை நாங்களே வருவோம் என்று ஈஸ்வரி சொல்லுகிறார். இல்லம்மா ராதிகா வக்கீல் அரேஞ்ச் பண்ணி இருக்கா அதனால நான் போய் பாத்துட்டு வரேன் என்று சொல்லுகிறார். அப்ப சுத்தம் அவ ஏதோ பிளான் பண்ணி இருக்கா வேண்டாம் என்று சொல்லுகிறார் ஈஸ்வரி. அவங்க ரெண்டு பேரும் சேர்ந்துக்கிட்டு உள்ள ஜெயிலுக்கு அனுப்பிடுவாங்க காலைல கூட அவங்க சிரிச்சு பேசிகிட்டு இருந்தாங்க அவங்கள நம்பாத என்று ஈஸ்வரி சொல்ல அப்படியெல்லாம் ஒன்னும் இல்லம்மா நீங்க கவலைப்படாதீங்க என்று ஆறுதல் சொல்லுகிறார்.
பிறகு ஈஸ்வரி என்ன சொல்லுகிறார்? பாக்கியா எடுக்கப் போகும் முடிவு என்ன? கோபிக்கு என்ன தீர்ப்பு வழங்கப் போகிறார்கள்? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.