ஊருக்கு கிளம்பும் நந்தினி சூர்யா, சுந்தரவல்லி போடும் பிளான், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ..!
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும், ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.
நேற்றைய எபிசோடில் ரஞ்சிதாவிடம் நல்லா படி எக்ஸாம்ல நல்ல மார்க் வாங்கணும் என்று புனிதா சொல்லிக் கொண்டிருக்கிறார். இல்லனா நந்தினி அக்கா கிட்ட கம்ப்ளைன்ட் பண்ணிடுவேன் என்று சொன்ன நந்தினி அக்கா தான் இப்போ போன் பண்ணவே மாட்டேங்குதே என்று பேசிக்கொண்டிருக்க சிங்காரம் வருகிறார். ரஞ்சிதா அக்காவை பார்க்கணும் போல இருக்கு ஊருக்கு போகலாமா என்று கேட்கிறார். உடனே அம்மாச்சியும் தல பொங்கல் வருது ஊருக்கு போக வேணாவா என்று கேட்க புனிதா போன வாட்டி அசிங்கப்பட்டு வந்தது போதாதா என்று கேட்க சிங்காரம் அதையே யோசிச்சுக்கிட்டு இருந்தா எப்படிமா என்று சொல்லுகிறார். நம்மளுக்குன்னு சூடு சொரணை இல்லையா என்று புனிதா கேட்க அம்மாச்சி அவ சொல்றது சரிதான் என்று சொல்லுகிறார்.
ஆனா எனக்கு ஒரு ஐடியா தோணுது நந்தினி தல பொங்கலுக்கு நம்ம வீட்டுக்கு வர வச்சா என்ன என்று அம்மாச்சி சொல்ல, புனிதா மற்றும் ரஞ்சிதா இருவரும் சந்தோஷப்படுகின்றனர். அவசரப்படாதீங்க பேசி பார்க்கலாம் என்று சிங்காரம் சொல்லுகிறார். மறுபக்கம் கல்யாணம் குளிரில் நடுங்க உனக்கு குளிரலம்மா என்று கேட்கிறார்.
இதெல்லாம் ஒரு குளிரான எங்க ஊர்ல விடியற் காலையில் எழுந்து கோலம் போட்டு அதுல பூசணி பூவெல்லாம் வைப்போம் என்று சொல்லி பேசுகிறார். ஒரு டீ போட்டு குடிச்சா தான் இந்த குளிர் போகும் என்று சொல்ல சரி போட்டு குடிப்போம் என்று நந்தினி இருவரும் டீ போடுகின்றனர். அருணாச்சலம் வந்து உட்கார உடனே சிங்காரம் போன் போடுகிறார். உங்ககிட்ட ஒரு விஷயம் பேசணும் என்று தயங்க, எதுவா இருந்தாலும் சொல்லுப்பா என்று சொல்லுகிறார். பிள்ளைகளுக்கு கல்யாணம் ஆகி வர தல பொங்கல் எல்லாத்தையும் எடுத்துக்கிட்டு வந்து ஜாம் ஜாம்னு பண்ணனும்னு ஆசை ஆனால் நந்தினி சொன்னதும் சரிதானே என்று சொல்ல, அதெல்லாம் எதுக்கு இன்னும் நெனச்சுக்கிட்டு என்று சொல்ல, அதுக்கு இல்லையா இந்த ஒரு வாட்டி புள்ளைங்கள இங்க அனுப்பி வெச்சீங்கன்னா உங்களை கொண்டாடிட்டு அனுப்பி வெச்சிடுறேன் என்று சொல்லி கேட்கிறார். இல்ல சிங்காரம் நீ சொல்ற மாதிரியெல்லாம் அனுப்ப முடியாது என்று சொல்ல சிங்காரம் அதிர்ச்சியாக, உன் பொண்ண மட்டும் அனுப்ப முடியாது சூர்யாவையும் சேர்த்து அனுப்புறேன் என்று சொல்ல சிங்காரம் சந்தோஷப்படுகிறார். சந்தோஷமா பொங்கல் வச்சுட்டு கொண்டாடிட்டு அனுப்புங்க என்று சொல்லுகிறார். இதையெல்லாம் கேட்ட நந்தினி சூர்யா சார் கல்யாணத்துக்கு வந்தது அதுக்கு அப்புறம் இப்பதான் போகப் போற ரொம்ப சந்தோஷமா இருக்கு. எங்க ஊர் செடி கொடி எல்லாம் போய் பாக்கணும் இது மட்டுமில்லாமல் ஊரில் என்னெல்லாம் பண்ண வேண்டும் என்பதை கல்யாணத்திடம் சந்தோஷமாக சொல்லுகிறார்.
எல்லாம் சரி ஆனா சூர்யா சார் கூட வருவாருன்னு சொல்றதுதான் ஒரு மாதிரியா இருக்கு என்று சொல்லுகிறார். ஐயா வரதுல உனக்கு என்னமா பிரச்சனை என்று சொல்ல, சூர்யா சார் வந்தா ஏதாவது பிரச்சனை வரும்னு பயமா இருக்கு என்று சொல்லுகிறார். பிறகு சூர்யா வர அருணாச்சலம் அவரை நிறுத்தி உனக்கு பொங்கலுக்கு என்ன பிளான் இருக்கு என்று கேட்கிறார். ஸ்வீட் பொங்கலோ கரும்பு சாப்பிடுவோம் அவ்வளவு தானே என்று சொல்லுகிறார். அதெல்லாம் ஒன்னும் இல்ல இந்த வாட்டி வித்தியாசமா செலிப்ரேட் பண்ண போற, எல்லோரும் ஃபேமிலியா எங்கனா வெளியே போறோமா என்று கேட்க வெளியே தான் போக போறோம் ஆனால் நாங்க வரப்போறதில்ல நீயும் நந்தினி மட்டும் போக போறீங்க என்று சொல்லுகிறார். உங்களுக்கு இது தல பொங்கல் அதனால நீ நந்தினி கூட சேர்ந்து அவங்க ஊர்ல போய் கொண்டாடிட்டு வா என்று சொல்ல, சூர்யா போக மறுக்கிறார். நாங்க போய் என்ன பண்ண போறேன் டாடி நந்தினி மட்டும் அனுப்பி வைங்க நான் நந்தினி கிட்ட சொல்றேன் என்று நந்தினியை கூப்பிட்டு நிற்க வைக்கிறார். எனக்கு ஒரு கமிட்மெண்ட் இருக்கு உங்க ஊருக்கு போக சொல்றாரு அதனால நீ தனியா போயிட்டு வந்துடுவ இல்ல என்று கேட்கிறார். உனக்கு ஒரு கார் ரெடி பண்ணி அனுப்பி விடுறேன். நீ இந்த வீட்டு வாசல்ல ஏறுனீங்கன்னா உங்க வீட்டு வாசல்ல இறக்கி விட்டுருவாங்க பத்திரமா போயிட்டு வா என்று சொல்ல நந்தினி சரி என்று தலையாட்டுகிறார்.
உடனே சுந்தரவல்லி வந்து நான் எல்லாத்தையும் கேட்டுட்டு தான் இருக்கேன். நீங்க பண்றது ரொம்ப ஓவரா தான் இருக்கு இந்த வீட்ல எல்லாமே முறைப்படியா தான் நடந்ததா இப்ப தல பொங்கல் கொண்டாட, இவன் யாரு இந்த வீட்டோட இளவரசன், அவன் போடுற ஷூக்கு தகுதியா இருக்குமா இவங்க குடும்பம்.அங்க போயி இவன் பொங்கல் கொண்டாடணுமா? அவனை ஏதாவது வற்புறுத்தி அனுப்புனீங்கன்னா அவ்வளவுதான் என்று சொல்லிக் கொண்டிருக்க மேலிருந்து சூர்யா வேகமாக ஓடி வந்து முதலில் நீங்க சொன்னது புரியல டாடி இப்போ புரிந்துடுச்சு. இப்போ நான் போறேன் நான் மட்டும் இல்ல என் அழகு பொண்டாட்டியோட ஜாலியா போகப் போற, பொங்கலை வேற மாதிரி செலிப்ரேட் பண்ண போறேன் என்று சொல்லுகிறார். இங்க பொங்க வைக்கிறதுக்கு முன்னாடியே சிலருக்கு பொங்க பானை மாதிரி கொதிக்குது போல என்று சுந்தரவல்லி வெறுப்பேற்றுகிறார். நீங்க எப்ப போகணும்னு மட்டும் சொல்லுங்க சூப்பரா செலிப்ரேட் பண்ணிட்டு வந்ததெல்லாம் என்று சொல்ல சுந்தரவல்லி கோபப்பட்டு சென்று விடுகிறார்.
அருணாச்சலம் வெளியில் நின்று யோசித்துக் கொண்டிருக்க நந்தினி வருகிறார். எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியலம்மா நான் சின்ன வயசுல இருந்து கஷ்டப்பட்டு படிச்சு வளர்ந்தவன் ஆனா அவ சின்ன வயசுல இருந்தே கோடீஸ்வர விட்டு பொண்ணு அதனால அந்த திமிரு இன்னும் போகல அதெல்லாம் விடுமா நீ ஊருக்கு போயிட்டு பொங்கலை சிறப்பா கொண்டாடிட்டு உங்க அப்பா அம்மாச்சி தங்கச்சிங்களோட சந்தோஷமா இருந்துட்டுவாம்மா. அங்க தங்கச்சிங்க கூட சந்தோஷமா பேசிட்டு என்ன படிக்க போறாங்க என்ன செய்யப் போறேன்னு கேட்டுட்டு வா எல்லாமே செஞ்சிடலாம் என்று சொல்ல அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் ஐயா என்று சொல்லுகிறார் சரி நீ எப்ப புரிஞ்சுக்க போற என்று சொல்லிவிட்டு கிளம்ப போக, மீண்டும் நந்தினி அவரை நிறுத்தி சூர்யா சார் கண்டிப்பா வருவாரா என்ன பஸ் ஏத்தி விட்டுருங்க நான் போயிடுவேன் என்று சொல்ல அதெல்லாம் தப்புமா என்று சொல்லுகிறார் அருணாச்சலம். சூர்யா உன்ன பத்திரமா கூட்டிட்டு போயிட்டு வருவான் ஒரு நாள் ரெண்டு நாள் இருந்துட்டு வரணும்னு கிடையாது உன் இஷ்டம் போல எவ்வளவு நாள் இருக்கணுமோ அவ்வளவு நாள் இருந்துட்டுவா என்று சொல்ல நந்தினி சந்தோஷப்படுகிறார். உடனே அருணாச்சலம் இந்த பொண்ணுங்களுக்கெல்லாம் அம்மா வீட்டுக்கு போனா எங்க இருந்துதான் சந்தோஷம் வருமே தெரியல என்று சொல்லுகிறார் இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.
இன்று வெளியான ப்ரோமோவில் நந்தினி சுந்தரவல்லி இடம் பொங்கலுக்கு ஊருக்கு போறேன் என்று வந்து சொல்ல போனா அங்கே இரு திரும்பி வராத என்று சொல்லுகிறார். அருணாச்சலம் நந்தினிக்கும் அவங்க வீட்ல இருக்குறவங்களுக்கும் பொங்கலுக்கு கொஞ்சம் டிரெஸ் எல்லாம் எடுத்துட்டு வந்தேன் என்று சொல்ல, மாதவி நீங்க யாருக்கும் இன்னும் பொங்கல் டிரஸ் எடுக்கல அதுக்குள்ள பார்சல் பண்ணி ஆச்சா என்று நினைத்து கொள்கிறார்.
சூர்யாவும் நந்தினியும் காரில் போக மாதவியிடம், ஜோடியா போகட்டுமே ஆனால் திரும்பி வரும்போது என்று பேசுகிறார். என்ன நடக்கப் போகிறது என்று இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.