இரண்டு லட்சத்தை ரெடி பண்ணிய நந்தினி, சூர்யா கேட்ட கேள்வி, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா, அ.சுரேஷ்பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவுக்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

நேற்றைய எபிசோடில் சூர்யா நந்தினியிடம் உன் தங்கச்சி வாழ்க்கையை நீயே எதுக்கு கெடுக்கிற திருப்பி என்ன ஊருல எடுத்துட்டு போய் விட போறியா இங்கே படிக்கட்டும் விடு என்று சொல்ல, அப்போ இதெல்லாம் உங்க வேலை தானா அதுக்கு தான் முன்னாடியே போய் ரஞ்சிதாவ கூட்டிட்டு வந்தீங்களா என்று கேள்வி கேட்க அப்படி எல்லாம் இல்லை என்று சூர்யா சொல்ல, நந்தினி ஆனா ஒரு விஷயம் உங்க வீட்டு காசுல என் தங்கச்சி படிக்க கூடாது அவ வீட்டிலேயே கூட இருக்கட்டும் அவ திருட்டு பட்டத்தோட படிக்க தேவையில்லை என்று சொல்ல சூர்யா என்ன பண்ணப் போற என்று கேட்கிறார். உங்க வீட்ல இருந்து கட்டின 2 லட்சம் பணத்தை திருப்பி கொடுக்காம நான் அந்த வீட்டுக்கு வரமாட்டேன் என சொல்லிவிட்டு சென்று விடுகிறார்.
நந்தினி,விஜி, ரஞ்சிதா மூவரும் வீட்டுக்கு வர அம்மாச்சி வாசலில் நின்று கொண்டு டிசி வாங்கியாச்சா என்று கேட்க விஜி உள்ள போய் பேசிக்கலாம் என்று சொல்ல அனைவரும் உள்ளே வந்து உட்காருகின்றனர். நந்தினி டிசி வாங்கலாம்னு தான் போனேன். ஆனால் சூர்யா சார் அதுக்கு முன்னாடி இவள கூட்டிட்டு போய் டீசி கொடுக்க கூடாதுன்னு சொல்லிட்டாரு என்று சொல்ல புனிதா இப்பதான் நிம்மதியா இருக்கு என்று சொல்லுகிறார். என்ன நிம்மதியா இருக்கு அந்த வீட்டில காலம் பூரா இந்த விஷயத்தை சொல்லி காட்டுவாங்க விஷ பாம்பு மாரி கொத்தி கிட்டு இருப்பாங்க என்று சொல்ல இப்ப என்ன பண்ண போற என்று அம்மாச்சி கேட்க அவங்க கட்டுன ரெண்டு லட்சம் ரூபாயை திருப்பிக் கொடுத்தாகணும் என்று சொல்ல அம்மாச்சி அதிர்ச்சி அடைகிறார். இரண்டு லட்சத்துக்கு நம்ம எங்க போறது என்று கேட்க, என்ன கேட்டீங்க என்று நந்தினி கேட்ப ஆமா இல்லக்கா ரெண்டு லட்சம்ங்குறது ரொம்ப பெரிய காசுல்ல என்று சொல்ல ஆமா ரொம்ப பெரிய காசு தான் ஆனா திருப்பி கொடுத்து தான் ஆகணும் என்று சொல்லிவிட்டு விஜியிடம் அக்கா என்னடா இவ நம்ம கிட்டயே நச்சரிக்கிறானு நினைக்காதீங்க எனக்கு உங்களை விட்டா வேற யாரையும் தெரியாது என்று சொல்ல என்ன வேணும்னு கேளு நந்தினி என்று விஜி சொல்லுகிறார். இந்த பணம் தான்கா இந்த ரெண்டு லட்சத்தை ரெடி பண்ணி அவங்க மூஞ்சில விட்டெரியனும் நான் இன்னும் திருடல என் தங்கச்சி படிப்புக்கு நீங்க கட்டின காசு இங்கருக்கு எடுத்துக்கோங்கன்னு சொல்லணும் என்று சொல்ல, ஏதாவது 5000 பத்தாயிரம் நான் என்னால ஏற்பாடு பண்ண முடியும் இரண்டு லட்சம் தான் நான் என்ன பண்ண முடியும் என்று யோசிக்க, ஏதாவது பண்ண முடியுமான்னு பாருங்க அப்பதான் அந்த வீட்ல நான் கொஞ்சமாவது நிம்மதியா இருக்க முடியும், என்ன கேவலப்படுத்துவாங்க தண்ணி குடிச்சா கூட திருடினு சொல்லுவாங்க உங்கள கெஞ்சி கேட்கிறேன் யார்கிட்டயாவது கொஞ்சம் கேட்டு வாங்கி கொடுங்க நான் எப்படியாவது திருப்பி கட்டிடுவேன் கொஞ்சம் கொஞ்சமா கொடுத்துறேன் உங்க கூட சமையல் வேலை செஞ்சு கூட கொடுத்துடறேன் என சொல்லுகிறார்.
இப்படி எல்லாம் பேசி என்னை சங்கடப்படுத்தாத நந்தினி, இவ்வளவு தூரம் நீ சொல்லணும்னு எனக்கு அவசியம் இல்லை ஆனால் தொகை பெருசா இருக்கே அதுதான் யோசிக்கிறேன் என்று கேட்கிறார். யார்கிட்டயாவது வட்டி வாங்க முடியுமா என்று கேட்க அம்மாச்சி நம்ம இருக்குற நிலைமைக்கு இதெல்லாம் தேவையா, நீ போய் டிசி வாங்கிட்டு வந்துரு அவ ஒரு வருஷம் சும்மா கூட இருக்கட்டும் என்று சொல்லுகிறார். படிக்கிற பிள்ளையை எப்படி நிறுத்த முடியும் என்று விஜி கேட்க அப்போ லட்சக்கணக்கில் கட்டிப் படிக்க வைக்க முடியுமா என்று கேட்க இது படிக்க வைக்கிறதுக்காக இல்ல நம்ம மேல விழுந்த கலங்கத்தை துடைக்க என்று சொல்லுகிறார். ஆனா ஒன்னு நான் அந்த பணத்தை கொடுக்காமல் அந்த வீட்டு வாசப்படி ஏற மாட்டேன் என்று சொல்ல, விஜி விசாரிச்சிட்ட போன் பண்றேன்னு என விஜி சென்று விடுகிறார். ஆட்டோவில் வந்து கொண்டிருக்க சூர்யா போன் போட்டு நந்தினி எப்படி இருக்கா என்று கேட்க, உங்க வீட்டில ஏன் இப்படி இருக்காங்க அவ ரொம்ப நொந்து போய் இருக்கா என்று சொல்ல, எனக்கு புரியுது விஜி எல்லாருமே நான் இல்லாத நேரத்துல அவள பிச்சு புடுங்குறாங்க நான் எவ்வளவு பேசினாலும் அடங்க மாட்டேங்கிறாங்க நான் அவகிட்ட எதிர்த்து பேசணும் சொல்லி இருக்கேன் ஆனா அவ எதுவுமே பேச மாட்டேங்குற என்று சொல்லுகிறார்.
விஜியிடம் நந்தினி என்ன சொல்றா என்று கேட்க, அந்த பணத்தை திருப்பிக் கொடுக்காமல் அந்த வீட்டுக்கு வரமாட்டேன்னு பிடிவாதமா இருக்கா, இப்ப எதுக்கு அவ இவ்வளவு பிடிவாதமா இருக்கா என்று கேட்க அது அவ பக்கத்துல இருந்து பார்த்தா சாரி என்று தான் தோணுது என்று சொல்ல, அவ எப்படி ரெடி பண்ண முடியும் என்று கேட்க என்கிட்ட வட்டிக்கு வாங்கி கொடுக்க சொல்லி கேக்குறா என்று சொல்ல, சூர்யா நா அப்புறம் கூப்பிடுறேன் என போன வைக்கிறார். மறுபக்கம் அருணாச்சலம் கையை டாக்டர் செக் பண்ணி விட்டு உங்களுக்கு இப்போ சரியாயிடுச்சு கொஞ்ச நாளைக்கு வெயிட் தூக்காதீங்க எக்சைஸ் மட்டும் செய்ங்க சொல்லிவிட்டு சென்று விடுகிறார். சுந்தரவல்லி தூங்க கூப்பிட இல்லம்மா எனக்கு தூக்கம் வரல நான் வாக்கிங் போறேன் நீ போய் படு என அனுப்பி வைக்கிறார். மறுபக்கம் நந்தினி என்ன செய்வது என குழப்பத்தில் இருக்கிறார். சூர்யா காரில் வந்து இறந்த நந்தினியை எங்கே என கேட்க அவ வரமாட்டா என்று சொல்லுகிறார். ஏன் என்று கேட்க அவ ஸ்கூல்ல டிசி வாங்கணும்னு போனால்ல அதுக்கு முன்னாடியே நான் பிரின்ஸ்பல் கிட்ட பேசிட்டேன் எல்லா பிரச்சனையும் முடிஞ்சிடுச்சு நினைச்சா அடுத்த லெவலுக்கு போயிட்டா, இவ இந்த வீட்டிலிருந்து திருடி எடுத்துக்கிட்டு போய் பீஸ் கட்டிட்டானு சொன்ன அந்த பணத்தை திருப்பி கொடுக்காம வர மாட்டேன்னு சொல்லிட்டா, இப்ப யாரு அவகிட்ட பணத்த கேட்டா என்று அருணாச்சலம் சொல்ல அந்த பணத்தை நான் கூட கொடுக்கிறேன் என்று சொன்னேன் அவ கேட்கல என்று சொல்லுகிறார். இங்க இருக்கிற கும்பல் அவள திருடினு சொல்லி இருக்காங்க அதனால அவ மனசு ரொம்ப காயப்பட்டு இருக்கு அவ தங்கச்சி திருட்டு காசுல படிக்க வேணாம்னு நினைக்கிற என்று சொல்ல, அவ ரெண்டு லட்சத்தை எப்படி ரெடி பண்ண முடியும் என்று சொல்ல நான் எவ்வளவோ சொல்லிட்டேன் அவ முடிவுல உறுதியா இருக்கா என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார்.
உடனே சுந்தரவல்லி இதையெல்லாம் கேட்டு இதையெல்லாம் என்ன புது கதையா இருக்கு இரண்டு லட்சம் பணம் கொடுக்காமல் அவ வீட்டுக்கு வர மாட்டாளா அவளுக்கு அவ்வளவு ரோஷம் இருக்கா அவளை எவ்வளவோ கேவலம் படுத்தி பேசி இருக்கேன் கழுத்த புடிச்சு கூட வெளியே தள்ளி இருக்கேன் அப்ப எல்லாம் அமைதியா இருந்தவ இந்த விஷயத்துக்கு மட்டும் ரோஷம் வந்துடுச்சா என்று கிண்டல் அடிக்கிறார். ஒருவேளை சூர்யா பொண்டாட்டிய விட்டுக் கொடுக்காம பேசுறானோ என்று கேட்க, நீ நந்தினி தான் புரிஞ்சுக்கல ஆனா சூர்யாவை கூட புரிஞ்சுக்கலையா என்று அருணாச்சலம் கேட்கிறார். அவ்ளோ ரோஷம் இருந்தா பணத்தை கொடுத்துட்டு போய் நடுத்தெருவுல நிக்க சொல்லுங்க என்று சொல்ல, ஆணவத்தோட பேசாத சுந்தரவல்லி என்று சொல்ல இவ இப்படியே பேசிக்கிட்டு இருந்தா நாலு வீட்டில் போய் திருட தான் செய்வா அவ அதுக்கு கூட தகுதியானவ தான் என்று சொல்ல அந்த நேரம் பார்த்து சூர்யா வந்து நிற்க அவ பணத்தை கொடுக்க போறதும் இல்ல இந்த வீட்டுக்கு வர போறது இல்ல மொத்தமா போனா நிம்மதியா தான் இருக்கும் என்று சொல்ல சூர்யா வருகிறார். இந்த தாய்குலத்து கிட்ட சொல்லி வைங்க என் பொண்டாட்டி நந்தினி இங்க வருவா, அவ பணத்த ரெடி பண்ணி இவங்க முகத்துல போட்டுட்டு கண்டிப்பா வருவா அத நீங்க பார்த்தா மட்டும் போதும் என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார். அம்மாச்சி எத்தனை வருஷம் இருந்த ஊரிலேயே 5000 பத்தாயிரம் கொடுக்க யோசிப்பாங்க இந்த ஊர்ல எப்படி கொடுப்பாங்க என்று கேட்கிறார்.
பேசாம ரஞ்சிதாவ அந்த ஸ்கூல்ல இருந்து நிறுத்திடு என்று சொல்ல அவ ஆசையை தடுக்க வேண்டாம் எப்படியாவது பணத்தை ரெடி பண்ணி கொடுக்கணும் என்று நந்தினி சொல்லுகிறார். இதையே நெனச்சு சமைக்காம விட்டுறாதீங்க நான் போய் காய்கறி வாங்கிட்டு வரேன் என்று சொல்லி நந்தினி சொல்கிறார். மறுபக்கம் சூர்யாவும், விவேக்கும் ஒரு நபருக்காக காத்திருக்க உனக்கு டைமுக்கு வர தெரியாதா என்று கேட்க என்ன சார் பண்றது கெட்டப் எல்லாம் மாத்திட்டு வரணும் என்று சொல்ல விவேக் வட்டிக்கு விடுற ஆள் மாதிரியே கெட்டப் போட்டு சூப்பரா இருக்க என்று சொல்லுகிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.
இன்று வெளியான ப்ரோமோவில் சூர்யா ஏற்பாடு செய்த நபர் நந்தினியிடம் பணத்தை கொடுக்க, சூர்யா சாருக்கு தெரியாம பார்த்துக்கோங்க என்று சொல்லிவிட்டு போக நந்தினி சொல்ல மாட்டேன் என சொல்லுகிறார். உடனே கொஞ்ச நேரத்தில் நந்தினி புனிதாவிடம் பையை எடுத்து விட்டு வருமாறு சொல்லி பணத்தைப் போட்டுக் கொண்டு நான் கிளம்புறேன் என சொல்ல அம்மாச்சி எதுக்கு அவசர அவசரமா போகணும்னு சொல்றேன் என்று கேட்க முதல்ல இந்த பணத்தை அவங்க கிட்ட குடுக்கணும் அப்பதான் எனக்கு நிம்மதியா இருக்கும் என்று சொல்லிக் கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து சூர்யா வருகிறார்.
வந்து உட்கார்ந்தவுடன் வாங்க போகலாம் என்று கூப்பிட சூர்யா எதற்கு என்று இப்பதானே வந்தேன் அதுக்குள்ள எங்க போகணும் என்று கேட்க உங்க வீட்டுக்கு தான் என்று சொல்லுகிறார் அம்மாச்சி ஏதேனும் உங்க வீடு நம்ம வீடுன்னு சொல்லி பழகு என்று சொல்ல இப்ப ரொம்ப முக்கியம் என்று நந்தினி சொல்லுகிறார் அதற்கு சூர்யா 2 லட்சம் ரெடி பண்ணாம வீட்டு வாசப்படி ஏற மாட்டேன்னு சொன்ன இப்ப மட்டும் என்ன என்று கேட்க அதுக்காக போகணும்னு சொன்னேன் என்று சொல்லி இரண்டு லட்சத்தை எடுத்துக்காட்டுகிறார். உடனே சூர்யா எதுவும் தெரியாதது போல் வாவ் சூப்பர் நந்தினி என்று சொல்லி எப்படி ரெடி பண்ண என்று கேட்கிறார். என்ன நடக்கப் போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

