பணத்தை கொடுத்த நந்தினி சுந்தரவல்லி கேட்ட கேள்வி வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ..!

Web Ads

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு நந்தன் சி முத்தையா இயக்கத்திலும் அ.அன்பு ராஜா, அ. சுரேஷ்பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

moondru mudichu serial promo update 11-05-25
moondru mudichu serial promo update 11-05-25

நேற்றைய எபிசோடில் நந்தினி சூர்யாவிற்கு விசிறிவிட அம்மாச்சி பாசம் இல்லாமலா போய் தூங்காம விசிறிகிட்டு இருக்கா என்று கிண்டல் அடித்து விட்டுப் போக மறுநாள் காலையில் வரை நந்தினி தூங்கிக் கொண்டே விசிற சூர்யா முழித்துக் கொள்கிறார். ஆனால் நந்தினி அப்படியே விசிறி கொண்டே தூங்கி விட சூர்யா எழுப்பி விடுகிறார். நான் இப்படியேவா தூங்கிட்டேன் என்று கேட்க ஆமாம் என்று சொல்லுகிறார். அந்த நேரம் பார்த்து அருணாச்சலம் வீட்டுக்கு வந்து நந்தினி கையோடு கூட்டிட்டு வரேன்னு சொன்ன ஆனா இன்னும் வரல அதனாலதான் நானே வந்துட்டேன்னு என்று சொல்ல கூப்பிட்ட அவ தான் வரலைன்னு சொல்லிட்டா என்று சொல்லுகிறார். எப்படி இருந்தாலும் நான் பணத்துக்கு ஏற்பாடு செஞ்சிருவேன் ரெடி பண்ணிட்டு வந்துடறேன் என சொல்லுகிறார். கொஞ்சம் பணமா இருந்தாலும் பரவால்ல இரண்டு லட்சம் என்னம்மா பண்ணுவ என்று கேட்க கருப்பன் பார்த்துப்பான் என்று சொல்லுகிறார். உடனே அருணாச்சலம் சூர்யாவை வீட்டுக்கு கூப்பிட ஏன் டாடி என்று கேட்கிறார் நந்தினி மனசில் ஏற்பட்டிருக்கிற காயம் அதுக்கு அவளே மருந்து தேடிப்பா என்று சொல்லிவிட்டு அழைத்துச் சென்று விடுகிறார்.

மறுபக்கம் விஜி போன் போட்டு ஒருத்தர் பணம் கொடுக்கிறதா ஒத்துக்கிட்டாங்க என்று சொல்லி கூப்பிட இருவரும் அவர்களைப் சந்திக்க போகின்றனர். அப்புறம் முக்கியமான விஷயம் நந்தினி அவங்க நீங்க என்ன வேலை செய்றாங்கன்னு கேட்டாங்க என்கூட சேர்ந்து சமையலுக்கு போறோம் சம்பாதிக்கிறோம்னு சொல்லி இருக்கேன் நீ அப்படியே சொல்லிடு என்று சொல்லி இருவரும் அந்த வீட்டிற்கு வருகின்றனர். அந்தப் பெண்மணி ஒருவரிடம் காசு கொடுத்துவிட்டு மிரட்டும் படி பேசிக் கொண்டிருக்க நந்தினி கவனிக்கிறார். என்ன விஜி என்று கேட்க, பணம் கேட்ட விஷயத்தை சொல்ல எதுக்கு பணம் எதுக்கு என்று கேட்ட தங்கச்சியோட படிப்பு விஷயம் என்று நந்தினி சொல்ல, அதுதான் கழுத்துல அவ்ளோ பெரிய செயின் போட்டு இருக்கியே அதை வித்து கொடுக்க வேண்டியது தானே என்று அந்த பெண்மணி கேட்க விஜி அது மாமியார் வீட்டோட நகை நம்ம எப்படி விக்க முடியும் என்று சொன்ன சரி எவ்வளவு வேண்டுமென்று கேட்க இரண்டு லட்சம் பணம் நந்தினி செல்லுகிறார் என்கிட்ட அதெல்லாம் இல்ல, 20 ஆயிரத்துக்கு மேல கொடுக்க மாட்டேன் நீ டெல்லி அண்ணன் வீட்டுக்கு போய் பேசு, அவர் நேர்மையான ஆளு எவ்வளவு வேண்டுமானாலும் கொடுப்பாரு நான் போன் பண்ணி சொல்றேன் நீங்க போங்க என்று அனுப்பிவிட்டு டெல்லி என்பவருக்கு போன் போட்டு விஜி வரும் விஷயத்தை சொல்லுகிறார்.

மறுபக்கம் டெல்லி என்பவர் வீட்டில் வெளியே ஒரு மகன் அப்பாவிடம் நம்ம அம்மாவுக்கு என்ன ஆச்சு எதுக்கு உள்ள வச்சிருக்காங்க அவங்கள வெளியே வர சொல்லுங்க நம்ம போயிடலாம் என்று சொல்ல அந்த பெண்ணின் கணவர் வந்து காலில் விழுந்து கேட்டும் அவர்கள் விரட்டி அடிக்கின்றனர். உடனே டெல்லி என்பவர் வந்து பணத்தை கரெக்டா கொடுத்தா என்ன மாதிரி நல்லவன பாக்க முடியாது ஆனால் பணத்தை கட்ட லேட் ஆச்சுன்னா என்ன மாதிரி பொறுக்கிய பாக்க முடியாது என்று சொல்லி பணத்தை கொடுக்கிற வரைக்கும் உன் பொண்டாட்டி என் வீட்ல வேலைக்காரியா தான் இருப்பா என்று சொல்லி அனுப்ப அந்த நேரம் பார்த்து நந்தினியும் விஜியும் வருகின்றனர். டெல்லி அவர்களை வரவேற்று உட்கார வைக்கிறார். இந்த பொண்ணோட தங்கச்சி படிப்புக்கு பணம் வேணும் அவளை தானே என்று சொல்லிவிட்டு வாங்கிக்கலாம் என்று சொல்லுகிறார்கள் நந்தினி நிஜமாவா என்று கேட்க இதுல பொய் சொல்ல என்னம்மா இருக்கு என்று கேட்கிறார்.

மாசம் பொறந்து அஞ்சாம் தேதிக்குள்ள வட்டி வந்துடுமில்ல என்று சொல்ல அதெல்லாம் வந்துடும் என சொல்ல அந்த நேரம் பார்த்து வேலை செய்யும் பெண் டீ எடுத்துக் கொண்டு வந்து கொடுக்கிறார். பிறகு நந்தினி இடம் பெயர் அப்பா பெயர் எல்லாம் கேட்க நந்தினி சொல்லுகிறார் ஆனால் புருஷன் பெயர் கேட்க அதெல்லாம் எதுக்கு கேக்குறீங்க என்று கேட்க விஜியிடம் டெல்லி கேட்கிறார் விஜி சூர்யா என சொல்ல, டெல்லி அவர்களிடம் கையெழுத்து வாங்குகிறார். பிறகு பணத்தை கொடுத்து விட்டு நீ எந்த காரணத்துக்காக பணத்தை வாங்குறியோ அந்த விஷயம் நல்லபடியா நடக்கட்டும் என்று என்ற சொல்ல நந்தினி நன்றி சொல்லுகிறார் நன்றி சொல்றதெல்லாம் இருக்கட்டும் என்ன பத்தி வெளிய விசாரிச்சியா நான் எவ்வளவு பணம் வேணாலும் கொடுப்பேன் ஆனா முறையா தவணை வரலனா நடத்துற விதமே வேற மாதிரி இருக்கும் என்று வார்னிங் கொடுத்து அனுப்ப நந்தினி திரும்பும் போது டேபிளில் இடித்துக்கொள்ள அவர் உட்கார்ந்து தண்ணி குடிச்சிட்டு போமா என்று சொல்லுகிறார்.

மறுபக்கம் அருணாச்சலம் சோகமாக இருக்க சுந்தரவல்லி என்ன விஷயம் என்று கேட்க,மாதவி அது எப்படிம்மா இல்லாம இருக்கும் ரெண்டு லட்சத்தை எப்படி கொடுப்பாளோனு யோசிச்சுகிட்டு இருப்பாரு என்று சொல்லுகிறார். நீங்க எல்லாம் என்ன பேசிக்கிட்டு இருக்கீங்க, நந்தினியை கரிச்சி கொட்டி யார் பேசினாலும் உனக்கு சந்தோஷமா இருக்குமா என்று கேட்கிறார். இவங்க பேசறது உங்களுக்கு தப்பா தெரியுது ஆனால் நம்ம வீட்ல ஒரு திருடி இருந்திருக்கா பணத்தை எடுத்துட்டு போயிருக்கா அவ மேல உங்களுக்கு கோபமே வரலையா என்று கேட்கிறார். அசோகன் கிண்டல் அடித்து பேசிக்கொண்டு இருக்க நந்தினி பணத்துடன் ரஞ்சிதாவை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு வந்து நிற்க அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர் இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

இன்று வெளியான ப்ரோமோவில் நந்தினி ரஞ்சிதா உடன் வந்து இதுல ரெண்டு லட்சம் பணம் இருக்கு என்று சொல்லி டேபிளில் வைக்க திடீர்னு இரண்டு லட்சம் பணம் எப்படி ரெடி பண்ணி இருப்பாங்க உங்களுக்கு தோணலையா என்று சொல்ல நான் என் உயிரா நினைக்கிறேன் என் தங்கச்சியை தாண்டுறேன் என்று சொல்லி ரஞ்சிதாவே படுக்க வைத்து தாண்டுகிறார் நான் பொய் சொல்லி இருந்தா என் தங்கச்சிக்கு உயிர் போகும் என்று சொல்லுகிறார்.

நந்தினி வேலைக்கு போக வேண்டும் என்று அருணாச்சலத்திடன் சொல்லிக் கிளம்ப சுந்தரவல்லி அவ எங்க வேணா போகட்டும் ஆனா இங்க இருந்து போகக்கூடாது அப்பா வீட்டில் இருந்து போகட்டும் என்று சொல்லுகிறார். என்ன நடக்கப் போகிறது என்று எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.

moondru mudichu serial promo update 11-05-25
moondru mudichu serial promo update 11-05-25