Pushpa 2

போட்டோ பிரேம் மாட்டிய சூர்யா, கையெடுத்து கும்பிட்ட நந்தினி, மூன்று முடிச்சு சீரியல் எபிசோட்..!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்தில், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகி வருகிறது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

Moondru Mudichu Serial Episode Update
Moondru Mudichu Serial Episode Update

நேற்றைய எபிசோடில் கிச்சனில் நந்தினி பரபரப்பாக வேலை பார்த்துக் கொண்டிருக்க சூர்யா வந்து நிற்க கல்யாணம் அவருக்கு காபி போடுகிறார். நந்தினி சமைத்ததை கல்யாணத்திடம் டேஸ்ட் பார்க்க கொடுக்க சூப்பரா இருக்கு என்று சொல்லுகிறார். உடனே கல்யாணமும் காபி போட்டு சூர்யாவுக்கு கொடுக்கிறார். உடனே கல்யாணத்தை நிற்க சொல்லிவிட்டு கிச்சனில் வேலை செய்யும் நந்தினியையும் புஷ்பாவையும் வெளியில் வர சொல்லுகிறார்.

நந்தினி எதற்கு என்று கேட்க இங்கு ஒரு முக்கியமான ஈவண்ட் நடக்கப்போகுது என்று சொல்லி குடும்பத்தினர் அனைவரையும் கீழே வர சொல்லுகிறார். என்ன விஷயம் என்று அருணாச்சலம் கேட்க, சூர்யா அருணாச்சலம் கையில் ரிமோட் கொடுத்து அங்க பார்த்துகிட்டே ரிமோட்டை பிரஸ் பண்ணுங்க என்று சொல்லுகிறார். அதில் சூர்யாவும் நந்தினியும் கோவிலில் எடுத்துக் கொண்டுள்ள புகைப்படத்தை பிரேம் போட்டு மாட்டி உள்ளார். சூர்யா இதைப் பார்த்து சூப்பரா இருக்கு இல்ல டாடி அழகா இருக்கு என்று சந்தோஷப்பட்ட எப்படி இருக்கு நந்தினி என்று கேட்கிறார்.

உடனே சுந்தரவல்லி இந்த அசிங்கமான போட்டோவ கழட்டி ரோட்டில் வீசுங்க என்று கோபப்படுகிறார். சூர்யா கழட்ட முடியாது என்று என் தாய்க்குலத்திற்கு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் என்று சொல்கிறார். இதை நான் டெய்லியும் பார்த்துட்டு போயிட்டு இருக்கணுமா என்று சுந்தரவல்லி கேட்க அதுக்காக தான் மாட்டி இருக்கேன் என்று சொல்லுகிறார். இந்த போட்டோ பத்தலைன்னா சொல்லுங்க டாடி நிறைய போட்டோ மாட்டலாம் என்று சொல்ல, சுந்தரவல்லி கோபப்பட்டு உள்ளே சென்று விடுகிறார். பிறகு அருணாச்சலம் சூர்யாவை அனுப்பிவிட்டு மற்றவர்களையும் மேலே போக சொல்கிறார். கொஞ்ச நேரம் கழித்து வெளியில் வந்தால் அருணாச்சலம் போட்டோவை ரசித்து பார்க்கிறார் இந்த ஜோடிக்காக காத்துக்கிட்டு இருந்தோம் ஆனா சுந்தரவல்லி ஏன் புரிஞ்சுக்க மாட்டேங்கிறா என்று யோசிக்கிறார். சூர்யா நண்பருடன் நடந்த விஷயங்கள் பற்றி பேசிக்கொண்டிருக்க அருணாச்சலம் வருகிறார்.

போட்டோ மாட்டி உங்க அம்மாவ வெறுப்பேத்திட்டல போட்டோவ கழட்டு என்று சொல்ல அதெல்லாம் பண்ண மாட்டேன் என்று சொல்லுகிறார். ரூம்ல வேணா மாத்திக்கோ என்று அருணாச்சலம் சொல்லுகிறார். அதெல்லாம் கழட்ட முடியாது என்று உறுதியாக இருக்க அருணாச்சலம் அதை பாக்கும்போதெல்லாம் உங்க அம்மா நந்தினி மேல கோபப்படுவா என்று சொல்ல அதுக்கு மேல நானும் கோபப்படுவேன் என்று சொல்லுகிறார். உடனே நந்தினி வந்து இப்போ உங்க ஆசை நிறைவேறிடுச்சா, இதுக்கு தான் என்னை ஏமாத்தி கோவிலுக்கு வர சொன்னீங்களா? என்கிட்ட இருந்து சந்தோஷத்த பறிச்சிட்டீங்க நிம்மதியை படிச்சிட்டீங்க இப்ப இருக்கிறது என்னோட உயிர் மட்டும் தான் அதையும் பறிச்சிடுங்க நிம்மதியா போய் சேர்ந்துடுற. இருக்கிற ஆறு மாசத்துல ஒரு நாளாவது என்ன நிம்மதியா இருக்க விட்ரிங்களா எனக்கு மன உளைச்சலா இருக்கு என்னால தாங்க முடியல என்று திட்டுகிறார். ஆனால் சூர்யா உன் போட்டோவ கிழிச்சதனால அப்படி பண்ணேன் என்று சொல்லுகிறார். நந்தினி உங்கள தயவு செஞ்சு கெஞ்சி கேட்டுக்குறேன் அந்தப் போட்டோவ கழட்டுங்க என்று கேட்கிறார். ஆனால் சூர்யா கழட்டவே முடியாது என்பதில் உறுதியாக சொல்லி அனுப்பி விடுகிறார். நந்தினி சோகமாக இருக்க என்னம்மா ஆச்சு என்று கேட்கிறார். இந்த போட்டோவ பார்க்கும்போதெல்லாம் என்ன பிரச்சனை நடக்குமோ என்று எனக்கு பயமா இருக்கு அண்ணா என்று சொல்ல வீடு என்றால் பிரச்சனையாய் இருக்கதாமா செய்யும் என்று சொல்லுகிறார்.

இந்த போட்டோவ எடுனு சொன்னா கூட எடுக்க மாட்டேங்கிறாரு. கொஞ்ச நாள்ல எல்லாம் சரியா போயிடும் விடுமா என்று கல்யாணம் சொல்லுகிறார். அந்த நேரம் பார்த்து வந்த சுந்தரவல்லி கல்யாணத்தை கூப்பிட்டு நான் இப்போ ஆபீஸ்க்கு போற திரும்பி வரும்போது இந்த போட்டோ இங்க இருக்க கூடாது என்று சொல்லுகிறார். உடனே சூர்யா அங்கே வந்து இந்த போட்டோ மேல கை வைச்சனா இந்த வீடு ஃபுல்லா போட்டோவ தான் இருக்கும் விட்டா அவங்க ரூம்லயும் ஃபுல்லா போட்டோ மாட்டி விடுவேன் எழுந்து முழிக்கிறதே இந்த போட்டோவில் தான் இருக்கும் என்று சொல்ல சுந்தரவல்லி கோபமாக சென்று விடுகிறார்.

மாதவியும் சுரேகாவும் போட்டோ விஷயம் பற்றி பேசிக் கொண்டிருக்க புஷ்பா செம்பருத்தி டீ போட்டு இருப்பதாக கொடுக்கிறார். உடனே புஷ்பா உங்க போட்டோ எல்லாம் விட அவ போட்டோ பெருசா இருக்கு அதுவும் சின்னையா கூட இருக்கிறத பார்க்கும்போது கடுப்பா இருக்கு என்று சொல்ல சுரேகா அப்போ தூக்கி போட்டு உடை என்று சொன்னவுடன் புஷ்பா வேகமாக உடைக்கப் போக மாதவி தடுத்து நிறுத்துகிறார். உடனே சுரேகாவுடன் சூர்யா சொன்னது உனக்கு ஞாபகம் இல்லையா இது போட்டோல கை வச்சா இன்னும் வீடு ஃபுல்லா மாட்டினா என்ன பண்றது என்று பேசிக் கொண்டிருக்க நந்தினி வருகிறார். மாதவி நந்தினியை கூப்பிட சுரேகா நேத்து கோவிலுக்கு போனது இதற்கு தானே என்று கேட்க இதை எப்படி எடுத்தாங்கன்னு தெரியாதுமா ஆனா செல்பி எடுக்கிறேன்னு சொன்னாங்க என்று சொல்லுகிறார். சரி அதெல்லாம் விடு அந்த போட்டோவை பார்த்து அம்மா டென்ஷன் ஆகி உன் மேல கோபப்படுவாங்க அதுக்கு என்ன பண்ண போற என்று கேட்க எனக்கு என்ன பண்றதுன்னு தெரியல நீங்கதான் உதவி பண்ணனும் தயவு செய்து அதை எப்படியாவது கழட்ட சொல்லுங்க எனக்கு அதை பார்க்கும்போதெல்லாம் பயமா இருக்கு என்று சொல்லுகிறார் நந்தினி இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

Moondru Mudichu Serial Episode Update
Moondru Mudichu Serial Episode Update