கைதான நந்தினி, கண் கலங்கி நிற்கும் குடும்பத்தினர், மூன்று முடிச்சு எபிசோட்.!!
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்புராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதைக்களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

நேற்றைய எபிசோடில் பிரசிடெண்ட் மகன் புனிதாவை கட்டிப்பிடிக்க போய் கை பிடித்து இழுத்து வம்பு இழுக்க புனிதா அக்கா அக்கா என கூப்பிடுகிறார். உடனே அவன் புனிதாவின் கையை விட்டு சென்றுவிட நந்தினி வந்து என்னாச்சு என்று கேட்கிறார். பிறகு பிரசிடெண்ட் செய்ததை நந்தினி இடம் சொல்ல, பிரசிடெண்ட் மகனை நந்தினி துரத்திக் கொண்டு ஓடி அவளை அடி வெளுத்து வாங்குகிறார். ஒரு கட்டத்திற்கு மேல் பிரசிடென்ட் மகன் கையில் இருக்கும் பொடியை நந்தினி கண்ணில் தூவ நந்தினி அவனை தள்ளி விடுகிறார். அவன் பின்னால் இருக்கும் டிராக்டரில் மோதி தலையில் அடிபட்டு இரத்தம் வந்து கீழே விழுகிறான். உடனே அங்கு கூட்டம் கூடுகிறது. கூட்டத்தில் இருக்கும் ஒருவர் பிரசிடெண்ட் மகன நந்தினி தலையில அடிச்சு போட்டுடுச்சு என்று சொல்லி வண்டியில் ஏற்றி செல்கின்றனர்.
பிறகு குடும்பத்தினர் அனைவரும் பதற்றத்தில் இருக்க நந்தினி இடம் என்னாச்சுமா என்று கேட்கின்றனர் நந்தினி எதுவும் சொல்லாமல் அத்தையிடம் புனிதாவை மட்டும் உங்க வீட்ல வச்சுக்கோங்க என்று சொல்ல என்னுமா பிரச்சனை என்று கேட்கின்றனர். அதெல்லாம் நான் அப்புறம் சொல்ற அத்தை என்று சொல்ல அவர்களும் புனிதாவை அழைத்து சென்று விடுகின்றனர். பிறகு நந்தினியும் குடும்பத்தினரும் வீட்டுக்கு வர சிங்காரம் என்னம்மா ஆச்சு இப்பயாவது சொல்லுமா என்று கேட்கிறார்.
இது இப்ப நடந்த பிரச்சனை இல்லப்பா இதுக்கு முன்னாடியே என்று ஆரம்பித்து புனிதாவிடம் பிரசிடெண்ட் மகன் வம்பு இழுத்ததையும் பிறகு அவன் தற்போது புனிதாவுடன் நடந்து கொண்டதையும் சொல்ல சிங்காரமும் அம்மாச்சியும் கோபப்படுகின்றனர். உடனே சிங்காரம் நீ கம்பி கட்டையால ஏதாவது அடிச்சியா என்று நந்தினி இடம் கேட்க இல்லப்பா நான் அவன செருப்பால அடிக்க தான் போனேன் ஆனா அவன் கையில வச்சிருந்த பொடியை முகத்துல தூவி விட்டான் இதனால எனக்கு கண்ணு சரியா தெரியாம இருந்தது அப்புறம் பார்த்தா அவன் கீழே மூச்சு பேச்சு இல்லாம இருக்கா ஆனா நான் அவனை தள்ளி விடல என்பதில் உறுதியாக இருக்கிறார்.
சரிமா எதுவா இருந்தாலும் பாத்துக்கலாம் அவன் வேற கொலவெறியில் இருப்பா என்று சொல்ல ரஞ்சிதா அப்பா அக்காவ அரஸ்ட் பண்ணி கூட்டிட்டு போய்டுவாங்களா என்று கேட்க அதெல்லாம் ஒன்னும் பண்ண மாட்டாங்க பயப்படாத என்று அம்மாச்சி சொல்லுகிறார். கடவுளே அவளுக்கு தண்டனை கொடுத்துட்டு தான் நினைச்சுக்கலாம் என்று சொல்ல, உடனே சிங்காரம் நீ இவ்வளவு ஈஸியா சொல்றியேம்மா அப்படியெல்லாம் நடக்காது அந்த பிரசிடென்ட் ஏதாவது பண்ணுவான் போலீஸ் கூட வரும் என்று பேசிக் கொண்டிருக்க உடனே சிங்காரம் சூர்யா இல்லாததை பார்த்து சின்னையா எங்க போனாரு என்று கேட்கின்றனர். சூர்யா காணாமல் போனதால் இன்னும் குடும்பத்தினர் பதறுகின்றனர். சூர்யாவிற்கு ஃபோன் போட சுவிட்ச் ஆஃப் என வருவதால் இப்ப ஐயாவுக்கு என்ன பதில் சொல்றது எங்க போயிருப்பாரு என்று புரியாமல் யோசித்துக் கொண்டிருக்க நந்தினியின் அத்தையும் மாமாவும் வருகின்றனர். உள்ளே வேகவேகமாக வந்து இங்க இப்ப நிலைமையே சரியில்ல நாங்க புனிதாவை பத்திரமா வீட்ல விட்டுட்டோம் அப்பா பத்திரமா பார்த்து பாரு என்று சொல்ல சிங்காரம் இப்போது பிரச்சினையே இல்லாத ஒரு பெரிய பிரச்சனை வந்திருக்கு சூர்யா தம்பி காணும் என்று சொல்ல அவர் எங்க போயிருக்க போறாரு என்று யோசித்துக் கொண்டிருக்கின்றனர். பிறகு நந்தினி அத்தை வரும்போது பிரசிடென்ட் வீட்டு வழியாதான் வந்தோம் அங்க அருவா கம்பு வச்சிக்கிட்டு பத்து பதினைந்து பேர் ரெடியாயிட்டு இருக்காங்க இங்க வர்றதுக்கு அதிக வாய்ப்பு இருக்கு அதனால நீங்க நம்ம வீட்டுக்கு வந்துருங்க இப்போதைக்கு அது தான் சேஃப்டி என்று கூப்பிடுகின்றனர்.
ஆனால் நந்தினி இன்னைக்கு வந்துரலாம் ஆனா இந்த பிரச்சனை இதோட முடியாது மாமா சூர்யா சார் வேற காணோம் என்று பேச நந்தினியின் மாமா இப்போதைக்கு நீங்க சேஃப்டியா இருங்க நான் போய் கூட சூர்யாவ தேடிட்டு வரேன் என்று சொல்ல, அந்த நேரம் பார்த்து அவருக்கு போன் வருகிறது. போலீஸ் வரும் தகவலை தெரிந்தவுடன் போலீஸ் வராங்க வாங்க கிளம்பிடலாம் என்று சொல்லு அனைவரும் கிளம்பும் நேரம் பார்த்து போலீஸ் வந்து எங்க தப்பிக்க பாக்கறீங்க என்று நந்தினியை அரெஸ்ட் செய்து அழைத்து சென்று விடுகின்றனர் இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.
