கபடியில் ராஜாங்க மணி நிறைய அலறவிட்ட நந்தினி.. சந்தோஷத்தில் குடும்பத்தினர், வெளியான மூன்று முடிச்சு,சிங்கபெண்ணே ப்ரோமோ.!!

Web Ads

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.தற்போது மூன்று முடிச்சு சீரியல் மற்றும் சிங்க பெண்ணே சீரியலும் இணைந்து மகா சங்கமமாக ஒளிபரப்பாகி வருகிறது.

moondru mudichu and singapenne serial promo update 03-02-26
moondru mudichu and singapenne serial promo update 03-02-26

நேற்றைய எபிசோடில் ராஜாங்கமும் அவரது தம்பியும் வீட்டுக்கு வர, கோபத்தில் பரமு அவர்களை திட்டுகிறார். நாளைக்கு மேட்ச்ல விற்றுவேனு நினைக்கிறியா என்று சொல்ல, உன் பேச்சு எல்லாம் வெறும் வார்த்தை மட்டும் தான் என்று வெறுப்பேற்றும் படி பேசி நாளைக்கு கபடி ல ஜெயிச்சு அம்மனுக்கு கிரீடத்தை நீதான் வைக்கணும் என்று சொல்ல அப்படியேதான் நடக்கும் என ராஜாங்கம் சொல்லுகிறார். மறுநாள் காலையில் அம்மன் முன் குடும்பத்தினர் அனைவரும் இருக்க ஆனந்திக்கு தாலி பிரித்து கோர்க்கும் விஷயம் நடக்கிறது. ஆரம்பிக்கும்போதே பார்வதி பெத்தவங்க இல்லாம என்ன நடந்து என்ன புரியோச்சனம் என்று சொல்ல எங்களை சுத்தி இவ்வளவு நல்லவங்க இருக்கும்போது எங்களுக்கு அந்த குறை தெரியல என்று சொல்ல சூர்யாவும் மகேஷும் அன்பு ஆனந்தியை பாராட்ட எங்கள விட நல்ல மனசு நந்தினிக்கு தான் அவங்க கையால தான் இன்னைக்கு தாலி பிரிச்சு கோத்துக்க போறோம் என்று சொல்லி உட்கார நந்தினியே தாலியையும் கோர்த்து கொடுக்க அன்பும் ஆனந்தி கழுத்தில் போட அனைவரும் ஆசிர்வாதம் செய்கின்றனர். பிறகு பூஜையம் நல்லபடியாக நடக்க பூஜாரி போய் கோயில சுத்திட்டு வாங்க என்று சொல்ல ஆனந்தி,அன்பு நந்தினி சூர்யா மகேஷ் மித்ரா என அனைவரும் கோவிலை சுற்றி வருகின்றன.

மறுபக்கம் ராஜாங்கமும் அவரது குடும்பத்தினரும் அவர்களை எப்படி தோற்கடிப்பது என்று திட்டம் போடுகின்றனர். கபடில என்ன ஜெயிக்க யாராலயும் முடியாது என்று சொல்லுகிறார். நம்மள பத்தி எல்லாம் உண்மையும் தெரிஞ்ச பிறகு இந்த ஊர்ல யாரும் நம்மளுக்கு சப்போர்ட் பண்ண மாட்டாங்க என்று சொல்ல ராஜாங்கம் யாரும் எனக்கு சப்போர்ட் பண்ண வேணாம் என்று சொல்ல, உங்க திறமையான மட்டும் ஜெயிக்க முடியாது சூழ்ச்சி பண்ணனும் என்று சொல்ல என்ன சூழ்ச்சி என்று கேட்க, மகேஷ் டீமில் விளையாடிய இரண்டு பேரை அழைத்து வந்து இன்னைக்கு நடக்கப்போற மேட்ச்ல நீங்க ரெண்டு பேரும் விளையாடக்கூடாது என்று சொல்ல, அவர்கள் எங்களுக்கு கபடி தான் உசுரு நாங்க விளையாட தான் செய்வோம் என்று சொல்ல ராஜாங்கம் அவர்களை ரூமில் அடைத்து வைக்க சொல்ல இந்த சூழ்ச்சி போதுமா என்று பரமுவிடம் கேட்கிறார்.

மறுபக்கம் கபடி போட்டியும் கோலாகலமாக தொடங்க முதலில் வீரா டீம் என்ட்ரி கொடுக்கின்றனர். பிறகு சூர்யாவும் அவர்களது டீமும் வருகின்றனர். உடனே ராஜாங்கமும் விளையாட உள்ளே வர, டாஸ் தொடங்க போகும் நேரத்தில் சூர்யா டீம் அமைதியாக இருக்க, ராஜாங்கம் நக்கல் அடித்து பேசுகிறார். என்ன பிராப்ளம் என்று கோச் கேக்க சப்ஸ்டியூட் வரல என்று சொல்லுகின்றனர். பத்து நிமிஷம் டைம் தருகிறோம் ஆள ரெடி பண்ணுங்க என்று சொல்ல மகேஷ் சரி என சொல்ல இந்த ராஜாங்கத்தை மீறி யாரும் உள்ளே வர முடியாது என்று சவால் விட நாங்க வருவோம் என்று சொல்லி நந்தினியும் ஆனந்தியும் சொல்ல ராஜாங்கம் கிண்டல் அடிக்கிறார். உடனே ஆனந்தியும் நந்தினி பெண் வீராங்கனைகள் குறித்து பெருமையாக பேசுகிறார். நாங்க சாதிக்க பிறந்தவங்க மட்டும் கிடையாது. உங்கள சோதிக்க பொறந்தவங்க என்று சொல்லுகின்றனர். உடனே டாசும் தொடங்கி ராஜாங்கம் வின் பண்ணி ரெய்டு போக முடிவெடுக்கிறார். ராஜாங்கம் ரெய்டு வந்து மூணு பேரை அவுட் ஆக்குகிறார். அவர்களது டீமிலிருந்து அன்பு ரெய்டுக்கு வந்து ஒருவரை அவுட் பண்ணி விட்டுச் செல்ல பிறகு வீரா வருகிறார். அவரும் மூணு பாயிண்ட்களை அள்ளி செல்கிறார். சூர்யா ரைட்கு போக அவரது கண்ணில் மண்ணை தூவி விட அவர் ஒருவரை மட்டும் அவுட் ஆகி விட்டு வந்து விட்டு கோபப்பட மகேஷ் அவரை தடுத்து நிறுத்துகிறார்.

சூர்யா டிமிலிருந்து ரைடுக்கு வந்த நபரின் காலை உடைத்து அனுப்பி விடுகின்றனர். மீண்டும் ரைட்க்கு வந்த ராஜாங்கம் மீண்டும் ஒருவரை காயப்படுத்தி விடுகிறார். இதனால் அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். இதெல்லாம் விளையாட்டே இல்லை என்று அன்பு கோபப்பட விளையாட்டு இப்படித்தான் இருக்கும் என்று வீரா சொல்லுகிறார். உங்களால விளையாட முடியலன்னா ஊர பார்த்து போங்கடா போடி பசங்களா என்று ராஜாங்கம் சொல்லுகிறார். ஆனந்தி அன்புவிடம் நம்ம எதிரில் இருக்கிறவங்க துரோகிங்க அவங்கள ஓட விடனும் என்று சொல்ல, நந்தினி சூர்யாவிற்கும் மித்ரா மகேஷுக்கும் தைரியம் சொல்லுகிறார். உடனே மகேஷ் ரைடு வந்து மூணு பேரை அவுட் ஆக்க மூணு பேர் உள்ளே வாங்க என்று சொல்ல இரண்டு பேருக்கு அடிபட்டு இருப்பதால் சப்ஸ்டியூட் ஆக இருக்கும் நந்தினியும் ஆனந்தியும் உள்ளே இறங்குகின்றன.

இருவரையும் அலட்சியமாக நினைத்து ராஜாங்கம் அவரது டீமில் இருக்கும் ஒருவரை அனுப்ப, சூர்யா நந்தினிக்கும் அன்பு மகேஷ் இருவரும் ஆனந்திக்கும் தைரியம் சொல்லி நீங்க யாருன்னு அவங்களுக்கு காட்டுங்க என்று சொல்ல இருவரும் முன்னே வந்து நிற்கின்றனர். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

இன்று வெளியான ப்ரோமோவில் நந்தினி ஆனந்தியும் மட்டும் இருக்க நந்தினி ரைடு போக அனைவரையும் ஆல் அவுட் ஆகி டீமை ஜெயிக்க வைக்கிறார். உடனே அனைவரும் அதிர்ச்சியாக சூர்யா நந்தினி தூக்கி சுத்த நண்பர்கள் அணிய இறுதியாக வெற்றி பெறுகிறது. என்ன நடக்கப் போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

moondru mudichu and singapenne serial promo update 03-02-26
moondru mudichu and singapenne serial promo update 03-02-26