Web Ads

வீட்டை விட்டு கிளம்பிய பிரபு, சூர்யா கொடுத்த ஷாக், மூன்று முடிச்சு மற்றும் மருமகள் சீரியல் மகா சங்கமம் எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா, அ. சுரேஷ்பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவுக்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

moondru mudichu and marumagal serial episode update

moondru mudichu and marumagal serial episode update

மூன்று முடிச்சு சீரியல் மற்றும் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மருமகள் சீரியல் மகா சங்கமமாக ஒளிபரப்பாகி வருகிறது.

நேற்றைய எபிசோடில் டான்ஸ் போட்டியில் அவனை நான் தோற்கடித்திடுவேன் சமபந்தி நடக்கிற வரைக்கும் எல்லாம் அவன் இருக்க மாட்டான் அவன் பொட்டியை தூக்கிட்டு கிளம்பிடுவான். நம்ப எதிரிய களத்தில் சந்திக்கணும் என்று சொல்ல ஏகாம்பரமும் சம்மதிக்கிறார். உடனே வேல்வழி இவன் சொல்றத நம்பாதீங்க டாடி இவன் ஆதிரை கூட பேசிகிட்டு இருந்தத நான் கேட்டேன் என்று சொல்ல,ஆமா நான் ஆத்திரையோட ஆள்தான் அவங்களுக்கு சப்போர்ட்டா பேசுற மாதிரி இருந்தது உங்களுக்கு தான் சப்போர்ட் பண்ணுங்க வாங்க போகலாம் நாம சேர்ந்து அந்த பிரபுவை ஓட விடுவோம் என்று காரில் கிளம்ப இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த பிரபு கோபமாக வீட்டுக்கு வருகிறார். சூர்யா ஏகாம்பரம் குடும்பத்துடன் வீட்டுக்கு வந்து இறங்க ஆதிரை சந்தோஷப்படுகிறார். உடனே மேகலை இடம் சொல்வது போல் இதுக்கு மேல குடும்பத்தை சேர்த்து வைக்கணும் அது எதுன்னு பேசினா தூக்கி போட்டு மிதிச்சிடுவேன் சூர்யா தம்பி சொன்ன ஒரு வார்த்தைக்காக தான் வந்தேன் என சொல்லிவிட்டு சென்று விடுகிறார்.

நந்தினி ஆதிரையிடம் எல்லாமே நல்லபடியா நடக்கும் என்று சொல்ல அருணாச்சலம் சூர்யாவை பாராட்ட, ஆதிரை நன்றி சொல்லிவிட்டு ரூமுக்கு வந்த இப்பதான் நிம்மதியா இருக்கு என்று பெருமூச்சு விட, பிரபு கோபமாக வந்து அதிரையிடம் என்கிட்ட ஏதாவது மறைக்கிறியா என்று கேட்ட ஆதிரை இல்லை என்று சொல்ல, கோவமாக பேக்கில் துணிகளை எடுத்து வைக்கிறார். நான் உன்ன இவ்வளவு நம்பர ஆனா நீ என்னை என்னைக்குமே முக்கியமான நினைச்சது கிடையாது அந்த ஆள் கூட ஒண்ணா உக்காந்து சாப்பிட்டால் எல்லாம் மறந்துடுமா என்னால எதையும் மறக்க முடியாது கிளம்பு என்று இழுத்து வர, சத்தம் கேட்டு அனைவரும் வந்து விடுகின்றனர். அருணாச்சலமும், பெரியவரும் திருவிழாவிற்கு பார்த்துட்டு போங்க என்று சொல்ல பிரபு முடியாது என்பதில் உறுதியாக இருக்க பிரபு ஆதிரையை இழுத்துக் கொண்டு வெளியில் வந்து ஆட்டோவில் ஏறி கிளம்ப, ஆட்டோவை மறுத்து சூர்யா பெரிய பட்டாசு சரத்தை வெடித்து டான்ஸ் ஆட பிரபு கடுப்பாகிறார்.

பிரபு சூர்யாவிடம் வந்து எதுக்கு இப்படி பண்ற என்று கேட்க நீ தோத்துட்டு போறத நான் கொண்டாட வேண்டாமா என்று சொல்ல நான் தான் தோக்கவில்லையே என்று சொல்ல சூர்யா தோத்துக்காம பயந்து ஓடினாலும், கலந்து கொள்ளாமல் போனாலும் தோத்ததான் நீ தான் தோத்துட்டல போய்கிட்டே இரு என்று சொல்லுகிறார். ஏகாம்பரம் அவன்கிட்ட எதுக்கு கெஞ்சிக்கிட்டு இருக்க போகட்டும் விடு என்று சொல்ல நான் கெஞ்சில அங்கிள் அவன்கிட்ட சண்டை போட்டுக்கிட்டு இருக்கேன் என்று சொல்ல பிரபு நான் இங்கிருந்து போகவே மாட்டேன் டான்ஸ் போட்டியில் ஜெயிச்சுட்டு தான் போவேன் என்ற சவால் விட்டு சென்று விடுகிறார். உடனே பிரபுவின் அப்பா பாட்டி ஆதிரை என மூவரும் சூர்யாவிற்கு நன்றி சொல்ல உடனே பிரபு ஆதிரையை கூட்டிச் செல்கிறார். ஏகாம்பரம் ஏன் தம்பி இப்படி பண்றீங்க என்று கேட்க, எதிரி தொக்கா மாட்டினா வச்சி செய்யணும் என்று சொல்ல நீ சொன்னா கரெக்ட்டா தான் இருக்கும் சூர்யா என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார். மேகலை சூர்யாவிடம் நன்றி சொல்ல நான் பார்த்துக்கிறேன் நீங்க கவலைப்படாதீங்க என்று சொல்லுகிறார்.

ஆதிரையும் சூர்யாவை திட்டுவது போல் நடிக்க பிரபு நம்மதான் டான்ஸ்ல ஸ்டேஜ தெறிக்க விடறோம் என்று சொல்லி டான்ஸ் பிராக்டிஸ் ஸ்டெப் போடுகிறார். சூர்யா நந்தினியிடம் வந்து அவன்கிட்ட நான் சவால் விட்டுட்டேன் நாம எப்படியாவது ஜெயிச்சாகணும் என்று சொல்ல, எனக்கு டான்ஸ் வராது என்று சொல்ல, அப்போ நான் அவன் முன்னாடி தோதா உனக்கு பரவாயில்லையா என்று சொல்லி விட்டு, சூர்யா நந்தினிக்கு பரதநாட்டியம் சொல்லிக் கொடுக்க ஆதிரை ஜன்னலில் இருந்து பார்த்து சிரிக்கிறார். எனக்கு வேண்டாம் வராது என்று சொல்ல நீ டயர்டு ஆயிட்டியா நான் உனக்கு போய் எனர்ஜி ட்ரிங்க் வாங்கிட்டு வரேன் என்று சொல்லி சூர்யா வெளியில் போக, ஆதிரை ரூமில் வந்த அவர் உங்களுக்கு தப்பா சொல்லிக் கொடுக்கிறாரு நீங்க இத கத்துக்கிட்டு ஆடுனீங்கனா தோத்துடுவீங்க நான் உங்களுக்கு பேசிக்கா சில ஸ்டெப்ஸ் சொல்லி தருகிறேன் என்று சொல்லிக் கொடுக்கிறார். இதனை பிரபு கவனித்து கோபமாக பார்க்கிறார்.

பிரபு ஆதிரையை ரூமுக்கு இழுத்து வந்து திட்டுகிறார். நான் நந்தினிக்கு டான்ஸ் சொல்லிக் கொடுக்கல, நந்தினி தான் எனக்கு சொல்லிக் கொடுத்தாங்க என்று சொல்ல இது என்ன நம்ப சொல்றியா என்று பிரபு கேட்கிறார். இது போட்டியில்ல வாழ்வா சாவா என்ற போராட்டம் இதில் நான் ஜெயித்தே ஆக வேண்டும் என்று சொல்ல, சூர்யா அது இந்த ஜென்மத்துல நடக்காது என்று சூர்யா வருகிறார். மீண்டும் சூர்யா பிரபு வாக்குவாதம் செய்ய, நந்தினி சமாதானம் செய்து அழைத்துச் செல்கிறார். பிறகு நடன போட்டி நடக்கும் இடத்திற்கு வந்து இருவரும் நிற்க நந்தினி இன்னைக்கு அந்த கஞ்ச பையனா நானா பார்க்கலாம் என்று சொல்லுகிறார்.

டான்ஸ் போட்டியும் தொடங்க முதல் ஜோடி டான்ஸ் ஆடுகின்றனர். அடுத்ததாக சூர்யா நந்தினியை கூப்பிட அவர்களும் சூப்பராக டான்ஸ் ஆடி முடிக்கின்றன. அடுத்ததாக பிரபு ஆதிரையை கூப்பிட அவர்களும் டான்ஸ் ஆடி முடிக்க இன்னும் கொஞ்ச நேரத்தில் முடிவுகள் அறிவிக்கப்படும் என்று சொல்லுகின்றனர். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

moondru mudichu and marumagal serial episode update

moondru mudichu and marumagal serial episode update