Pushpa 2

நந்தினி குடும்பத்திற்கு ஆதரவாக நின்ற சூர்யா, டென்ஷனான சுந்தரவல்லி, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ..!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு, தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாக்கி வருகிறது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

moondru mudichi serial promo update

moondru mudichi serial promo update

நேற்றைய எபிசோடில் மாதவி சுரேகாவிடம் வந்தவுடன் கிளம்புவாங்கன்னு பார்த்தா அடுத்த தீபாவளிக்கு தான் கிளம்புவாங்க போல என்று சொல்ல இவங்கள எல்லாம் விரட்டி விட்ரலாம் விடு அக்கா என்று சுரேகா சொல்லுகிறார். நந்தினி டைனிங் டேபிளில் இலையைப் போட்டு ஒவ்வொரு இலையிலும் பரிமாற கல்யாணமும் புஷ்பாவும் ஒரு ஒன்றாக வைத்துக் கொண்டு வருகின்றனர். சிங்காரம் குடும்பத்தினருடன் கீழே உட்கார்ந்து சாப்பிட்டு கொண்டு இருக்க அருணாச்சலம் வர நந்தினி அவரை சாப்பிட கூப்பிடுகிறார். சிங்காரம் குடும்பத்துடன் கீழே உட்கார மேலே உட்காந்து சாப்பிடலாமா என்று சொல்ல எங்க உட்கார்ந்து சாப்பிட்டால் என்ன இருக்கு என்று சொல்லுகிறார். பிறகு சிங்காரத்திற்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் அருணாச்சலம் சாப்பாடு பரிமாற நந்தினி அதை பார்த்து சந்தோஷப்படுகிறார்.

அந்த நேரம் பார்த்து சுந்தரவல்லி கோபமாக வீட்டுக்கு வர மாதவி சுரேகா மற்றும் அசோகன் என மூவரும் சாப்பிட்டுக் கொண்டிருக்கின்றனர் உள்ளே வந்து நுழைந்தவுடன் டேபிள் மேல் இருக்கும் சாமான்களை தட்டிவிட்டு இலையை இழுத்து விட்டு உங்களுக்கெல்லாம் சூடு சொரணை இல்லையா இந்த சாப்பாட்டை சாப்பிடுவீங்களா இதுக்கு போய் பிச்சை எடுக்கலாம் என்று நந்தினி குடும்பத்தை அசிங்கப்படுத்தி பேசுகிறார். அவ்வளவு திட்டிட்டு போனேன் அப்புறமும் நடு வீட்டுல உட்கார்ந்து சாப்பிட்டு இருக்கீங்க வெக்கமாவே இல்லையா என்று கேட்க அருணாச்சலம் சுந்தரவல்லி தடுக்க வர அவர் நான் திரும்ப வரத்துக்குள்ளே ஒருத்தரும் இருக்கக் கூடாது என்று சொல்லிவிட்டு கோபமாக மேலே சென்று விடுகிறார். இதனால் நந்தினி குடும்பம் கண்கலங்க நந்தினி கிச்சனுக்கு சென்று அழுகிறார். சிங்காரம் இனிமேல் ஒரு நிமிஷம் இந்த இடத்துல இருந்தாலும் நம்ம பொண்ணுக்கு தான் பிரச்சனை போயிடலாம் என்று கிளம்புகின்றனர்.

உடனே கல்யாணம் நந்தினிக்கு ஆறுதல் சொல்லுகிறார் இந்த நிலைமை எப்பையாவது மாறு ஒன்று நம்பிக்கை இருக்குமா கலங்காத உன் அண்ணன் நான் இருக்க என்னைக்கும் சின்னையாவும் பெரிய ஐயாவும் உள்ள கைவிட மாட்டாங்க என்று ஆறுதல் சொல்ல அந்த நேரம் பார்த்து சுந்தரவல்லி கல்யாணத்தை கூப்பிட அங்கு இருக்கிற தட்டு உடைந்ததெல்லாம் கிளீன் பண்ணியாச்சா என்று கேட்க இதோ பண்றேன்மா என்று சொல்ல உன்ன சொல்லல என்று சொன்னவுடன் நந்தினி அம்மா கிட்ட சொல்லிடம்மா என்று சொல்ல நந்தினி வந்து சுத்தம் செய்ய ஆரம்பிக்க திரும்பி பார்த்தால் சிங்காரம் மற்றும் குடும்பத்தினர் யாரையும் காணாமல் கல்யாணத்திடம் எங்க அண்ணா எல்லாரும் போனாங்க என்று கேட்க அவங்க நீ கிச்சனுக்குள்ள போனப்பவே போயிட்டாங்க அம்மா என்று சொல்ல வேகமாக நந்தினி வெளியே வந்து அவர்களை தேடி வருகிறார் சிங்காரமும் குடும்பத்தினரும் நந்தினி சொன்ன மாதிரி நம்ம அப்படியே வந்துட்டு இருந்தா இந்த பிரச்சனை இருந்திருக்காது என்று பேசிக்கொண்டு நடந்து வர புனிதா இருந்தாலும் சாப்பிட்டு இருக்கும்போது இப்படிதான் பேசுவாங்களா மனசு கஷ்டப்படும்படி என்று பேசிக்கொண்டு வருகிறார். உடனே நந்தினி அவர்களை தேடி கண்டுபிடித்து விட தங்கைகள் இருவரும் மந்திரியை கட்டிப்பிடித்து அழுகின்றனர்.

பிறகு அம்மாச்சி நீ எவ்வளவோ சொன்ன, சொன்னபடி நாங்க கிளம்பி இருந்தா இந்த அவமானம் ஏற்பட்டு இருக்காது என்று சொன்னால் நீங்க எங்க நான் சொன்னா கேக்குறீங்க என்று சொல்லிவிட்டு நீங்க சரியாவே சாப்பிடல நான் வரும்பொழுது ஒரு ஹோட்டல் பார்த்தேன் வாங்க சாப்பிடலாம் என்று கூப்பிட சிங்காரம் முதலில் மறுக்க நந்தினி மீண்டும் கூப்பிட சரியென வருகின்றனர். பிறகு ஒரு தள்ளுவண்டி கடையில் அவர்களை உட்கார வைத்து லெமன் சாதம் வாங்கி கொடுக்கிறார். பிறகு ரஞ்சிதா விற்கும் புனிதாவிற்கும் நந்தினி ஊட்டி விட அனைவரும் சாப்பிடுகின்றனர். நந்தினி பழைய நினைவுகளை யோசித்துக் கொண்டிருக்கிறார்.

உடனே காரில் வந்து இறங்கிய சூர்யா இங்கே என்ன பாட்டி பண்ணிக்கிட்டு இருக்கீங்க இங்கேயே சாப்பிடுறீங்க என்று கேட்க அம்மாச்சி எதுவும் சொல்லாமல் இருக்க புனிதா கோபப்பட்டு ஏன்னா சாப்பிட உட்கார்ந்த எங்கள உங்கம்மா அசிங்கப்படுத்தி துரத்தி விட்டுட்டாங்க அதனாலதான் என்று சொல்ல சிங்காரம் வாய மூடு புனிதா என்று அதட்டுகிறார். அதெல்லாம் ஒன்னும் இல்ல தம்பி என்று சிங்காரம் சொல்லி சமாளிக்க, இல்ல இல்ல நீ சொல்லு ஏதோ ஒரு பிரச்சனை நடந்திருக்கு என்று புனிதாவிடம் கேட்கிறார்.

உடனே நந்தினி என்ன சார் சொல்ல சொல்றீங்க எங்க வீட்ல இருக்கறவங்க இந்த வீட்டுக்கு வந்தது பேசுறது பழகுவது சாப்பிடுவது எதுவுமே உங்க அம்மாவுக்கு புடிக்கல அவங்க அசிங்கப்படுத்தி அனுப்பி போறாங்க என்று சொல்ல சரி நான் பஸ் ஸ்டாப்ல விடுறேன் என்று சொல்லுகிறார் உடனே நந்தினி நீங்க எதுக்கு விடணும் நீங்க ஒன்னும் விட தேவையில்லை நீங்க விட்ட உடனே அந்த வேலைக்கார குடும்பம் எதுக்கு கார்ல ஏறிச்சி என்று அதுக்கு ஒரு சண்டை போட்டு எங்களை அசிங்கப்படுத்தணுமா என்று சொல்ல சூர்யா இது ஒன்னாவது நான் செய்றேன் என்று சொல்ல அம்மாச்சி சரி என சம்மதிக்கிறார் ஆனால் நேராக வீட்டுக்கு வந்த சூர்யா காரை நிறுத்திவிட்டு ஹாரன் அடிக்கிறார். நந்தினி இப்ப எதுக்கு வீட்டுக்கு கூட்டிட்டு வந்தீங்க நாங்க கிளம்புறோம் என்று சொல்ல, சூர்யா ஒரே நிமிஷம் ஒரே நிமிஷம் என்று சொல்லியும் ஏற்கனவே நீங்க என் கழுத்துல தாலி கட்டினதனாலதான் நான் அசிங்கப்பட்டுட்டு இருக்கேன் என் குடும்பமும் சேர்ந்து அசிங்கப்படணுமா என்று சொல்ல மீண்டும் ஹாரன் அடிக்க குடும்பத்தில் இருக்கும் எல்லோரும் வெளியே வர சுந்தர வள்ளி அருணாச்சலம் என அனைவரும் வருகின்றனர். உடனே சூர்யா என்னோட மாமனார் குடும்பத்தை அசிங்கப்படுத்துனது யாரு என் முன்னாடி அசிங்கப்படுத்தி பாருங்க என்று சத்தம் போடுகிறார்.அதுவும் சாப்பிட்டுட்டு இருக்குறவங்கள பாதியில எழுப்புறது எவ்வளவு கேவலமான வேலை இதில் தாய் பேயினு வர சொல்றாங்க என்று கோபமாக பேச இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

இன்று வெளியான புரோமோவில் சூர்யா அவங்க என்ன தோட்டத்துல வேலை செய்றவங்களா என்னோட மாமனார் பேமிலி என்று சொல்லுகிறார்.

பிறகு சூர்யா சாப்பிட்டுவிட்டு கண்டிப்பாக எது இவங்க ரெண்டு பேரும் செஞ்ச சமையல் கிடையாது என்று சொல்லிவிட்டு நந்தினிக்கு ஊட்டி விட சுந்தரவல்லி டென்ஷன் ஆகிறார். என்ன நடக்கப் போகிறது என்று இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

moondru mudichi serial promo update

moondru mudichi serial promo update