குடும்பத்தாரிடம் கெஞ்சிய மீனா, கம்ப்ளைன்ட் கொடுத்த விஜயா, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்..!
குடும்பத்தாரிடம் மீனா கெஞ்ச விஜயா கம்ப்ளைன்ட் கொடுத்துள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து நடந்த விஷயங்களை வீட்டில் சொல்ல அண்ணாமலை நீ என்னதான் சொன்னாலும் அவன் செஞ்சது தப்புதான் அதை என்னால மன்னிக்க முடியாது என்று சொல்ல, மனோஜ் இத்தனை நாளா என்ன சொல்லிக்கிட்டு இருந்தான் ஆனா இப்ப உன் மச்சானே தப்பு செய்யும் போது அதுக்கு எத்தனை முட்டு கட்ட போட்டு கிட்டு இருக்க என்று சொல்லிக் கொண்டிருக்கிற, அவ பணத்தை திருட நீங்களும் எல்லா விதத்துல ஒரு காரணம் தான் என்று சொல்ல அனைவரும் முத்துவின் தம்பி மேல் தான் தப்பு என்பதை சொல்லுகின்றன. இதனால் மீனா மனமுடைந்து என் தம்பி பண்ணது தப்பு தான் என்னை மன்னிச்சிடுங்க என்று கையெடுத்து கும்பிடுகிறார்.
உடனே விஜயா போதும் நிறுத்துடி என்று சொல்லி நீ இந்த வீட்ல இருக்க கூடாது வெளியே போ என்று சொல்ல உடனே முத்து நாங்க தான் எங்க மேல தான் எல்லா தப்பும் இருக்கேன் நீங்க எந்த தப்பும் பண்ணல ரொம்ப நல்லவங்க இப்ப மன்னிப்பு தான் கேட்கிறோமே அவங்க வீட்டிலேயே போய் செருப்பால் அடிச்சு அசிங்கப்படுத்திட்டு வந்து இருக்கீங்க இன்னும் என்ன வேணும் அவங்களும் மன்னிப்பு கேட்டு இருக்காங்க என்று சொல்ல இவர் இந்த வீட்ல இருக்க கூடாது என்று விஜயா சொன்ன ஏன் என்று கேட்கிறார் அதற்கு இது என் வீடு என்று விஜயா கத்தி சொல்கிறார். அந்த நேரம் பார்த்து இரண்டு போலீஸ் வீட்டுக்குள்ளே வருகின்றனர்.
உடனே முத்து அவர்களிடம் என்ன ஆச்சு சார் என்று கேட்க நீ சொன்னதை இன்ஸ்பெக்டர் கிட்ட சொன்னேன் பா அதனால இவங்ககிட்ட வாபஸ் வாங்கிக்கிறேன் கையெழுத்து வாங்கிட்டு வர சொன்னாங்க என்று சொல்ல விஜயா வாபஸ் எல்லாம் வாங்க முடியாது என்று உறுதியாக இருக்கிறார். விஜயாவிடம் மீனா கெஞ்சி கேட்டும் மீனா அவரை இழுத்து தள்ளி விடுகிறார் பிறகு அண்ணாமலை இடம் அழுது கேட்டும் அவரும் இந்த விஷயத்துல நான் எதுவும் பண்ண முடியாதுமா என்று சொல்லிவிடுகிறார். ரோகினிடம் போய் கேட்க உங்க தம்பி பண்ணதுக்கு இந்த தண்டனை கிடைச்சுதா ஆகணும் என்று சொல்லிவிட மீனா மனமுடைந்து அழுகிறார்.முத்து எவ்வளவு சொல்லியும் கேட்காத விஜயா, கம்ப்ளைன்ட் கொடுத்து கையெழுத்தை போட்டு விடுகிறார்.போலீஸ் நீங்களே கூட்டிட்டு வந்து விட்ருங்கமா இல்லனா நாங்க வந்து அரெஸ்ட் பண்ணனும் தண்டனை பெருசா இருக்கும் என்று சொல்லிவிட்டு கிளம்புகின்றனர்.
ரவி சத்யாவிற்கு இந்த தண்டனை ஒரு நல்ல பாடமா இருக்கும் அண்ணி என்று சொல்ல அழாதீங்க என்று சொல்லுகிறார் அதற்கு முத்து அவர் தம்பிக்காக அவ அழுவா அக்காவா இல்லாம அம்மாவா வலத்துருக்கா என்று சொல்லுகிறார். குடும்பமா சேர்ந்து எல்லாரும் பழி வாங்கிட்டீங்க இல்ல நீங்க எல்லாரும் நல்லவங்க நாங்க கெட்டவங்க அவ்வளவு தானே எப்படி வெளியே எடுக்கணும்னு தெரியும் என்று சொல்ல மீனா நீ உள்ள போ என்று சொல்கிறார் விஜயா, உன்ன வெளியே போன சொன்ன இல்ல என்று சொல்லுகிறார் அதான் கம்ப்ளைன்ட் கொடுத்துட்டீங்க இல்ல அப்புறம் என்ன என்று சொல்ல விஜயா கோபப்படுகிறார்.
பிறகு முத்து சொல்ல வார்த்தை என்ன அதற்கு விஜயாவின் பதில் என்ன என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.