Pushpa 2

நடிகை ஜோதிகாவின் பதிவுக்கு, மீம்களை உருவாக்கி இணையவாசிகள் கிண்டல்

பான் இந்தியா படமாக சூர்யா நடித்த கங்குவாவை பார்த்த ரசிகர்களில் பெரும்பாலானோர், எதிர்மறையான கருத்துகளே தெரிவித்தனர்.

இந்நிலையில், படம் குறித்து நடிகையும் சூர்யாவின் மனைவியுமான ஜோதிகா தனது கருத்தினைத் தெரிவித்தார். அதற்கு பல இணையவாசிகள் மீம்களை உருவாக்கி பகிர்ந்து வருகின்றனர். இது குறித்த இணைதள கலாட்டா என்னவென்றால்..

படத்தினைப் பார்த்த ரசிகர்கள் பலரும் படம் முழுவதும் கத்திக் கொண்டே உள்ளார்கள் என்றும், படத்தின் பின்னணி இசை தெளிவாகவே இல்லை என்றும், முழுக்க முழுக்க இரைச்சலாக இருப்பதாகவும் தெரிவித்து வந்தனர்.

சூர்யாவில் இருந்து படத்தின் மற்ற கதாபாத்திரங்கள் எதற்கு எடுத்தாலும், கத்திக்கொண்டுதான் இருந்தார்கள். இது படம் பார்க்கும் ரசிகர்களுக்கு பெரும் எரிச்சலை ஏற்படுத்தியது.

இந்நிலையில், ஜோதிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், படம் குறித்தும் படத்திற்கு ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் அதிகம் பரவும் கருத்து குறித்தும் தெரிவித்திருந்தார். அதாவது படம் குறித்து அவர் வெளிப்படுத்திய கருத்துகளில்,

‘சூர்யாவின் மனைவியாக இதனை எழுதவில்லை. சினிமா ரசிகையாகவும், ஜோதிகாவாகவும் எழுதுகிறேன்.

நடிகராக இருப்பதற்காகவும், தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு முன்னேற்ற வேண்டும் எனும் சூர்யாவின் கனவை நினைத்து பெருமைப்படுகின்றேன்.

படத்தின் முதல் 30 நிமிடங்கள் ஒர்க் அவுட் ஆகவில்லைதான். ஒலியும் சரியாக இல்லைதான். அதேசமயம், குறைபாடுகள் என்பது படத்தில் ஒரு பகுதி. ஆனால், கங்குவா படத்திற்கு எதிராக திட்டமிட்டே தவறான கருத்துகள் பகிரப்பட்டுக்கொண்டே உள்ளனர்.

படத்தின் கேமரா வேலைப்பாடு, 3டி தொழில்நுட்பம், பெண்கள் சண்டை செய்யும் காட்சிகள் என பல விஷயங்கள் படத்தில் பாராட்டும் விதமாக உள்ளது. அது குறித்து யாருமே கருத்து தெரிவிக்கவில்லை என ஆதங்கத்தினை வெளிப்படுத்தினார்.

இந்நிலையில், இணையவாசிகள் ஜோதிகாவின் பதிவுக்கு மீம்களை உருவாக்கி கிண்டல் செய்து வருகின்றனர்.

குறிப்பாக, வடிவேலு அடிவாங்கி முடித்த பின்னர் மீண்டும் அவரை அடிவாங்க வைக்கும் தீப்பொறி திருமுகம் கதாபாத்திரத்தின் காமெடியைப் பகிர்ந்து, அதில் ஜோதிகா என கேப்ஷன் இட்டுள்ளனர்.

அதாவது, கங்குவாவை ரசிகர்கள் அடித்துத் துவைத்த பின்னர், மீண்டும் ரசிகர்களிடத்தில் கங்குவாவை அடிவாங்க வைக்கின்றார்’ என்பது இணையமெங்கும் வைரலாய் பரவுகிறது.