அவரிடம் கவனமாக இருக்க வேண்டும்: தனுஷூக்கு ரசிகர்கள் அன்புக் கோரிக்கை

Web Ads

கங்குவா படம் வந்திருச்சு, குபேரா படம் வரப்போகுது. இந்நிலையில், நடிகர் தனுஷூக்கு, அவரது ரசிகர்கள் விடுத்துள்ள கோரிக்கை குறித்து பார்ப்போம்.. வாங்க..

பன்முகத்திறமை கொண்டவர் நடிகர் தனுஷ். இவரது நடிப்பில் கடைசியாக வெளியான 50-வது படம் ராயன். தானே இயக்கியிருந்தார்.

வசூலில் சுமார் ரூபாய் 100 கோடிகளுக்கு மேல் வசூலித்ததால், வெற்றிப் படமாக மாறியது. இதனைத் தொடர்ந்து, வெளியாகவுள்ள படம் குபேரா. இந்தப் படம் நேரடி தமிழ் படமாகவும் நேரடி தெலுங்குப் படமாகவும் வெளியாகவுள்ளது.

ஏற்கனவே, தனுஷ் நடிப்பில் தெலுங்கில் ‘சார்’ எனவும் அதே படம் தமிழில் ‘வாத்தி’ என்ற பெயரிலும் வெளியானது. தெலுங்கு இயக்குநரும் தேசிய விருது பெற்ற இயக்குநருமான சேகர் கமுலாவின் குபேரா படத்தில் நடித்து வருகிறார் தனுஷ்.

படத்தில் நடிகர் நாகர்ஜுனாவும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தனுஷின் 51வது படமாக வெளியாகவுள்ள குபேரா படத்தில் ராஷ்மிகா மந்தனா, நாகார்ஜுனா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இங்குதான் பிரச்சினையே தொடங்குகின்றது.

அதாவது, இசை அமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் கடைசியாக வெளியான படம் கங்குவா. இந்தப் படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக மாறும் என நினைத்துக் கொண்டு இருந்த நேரத்தில், கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகின்றது. குறிப்பாக, படத்தின் பின்னணி இசை மிகவும் இரைச்சலாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர். இதனால் படம் பெரும் நெகடிவ் விமர்சனங்களைப் பெற்றது.

இந்நிலையில், படக்குழு தரப்பில் இருந்து தியேட்டர்களுக்கு படத்தின் ஒலி அளவினை இரண்டு பாய்ண்ட்கள் குறைக்கச் சொல்லி அறிவுரை வழங்கப்பட்டது. இப்படியான நெருக்கடியோ, விமர்சனங்களோ தனுஷின் குபேரா படத்திற்கு வந்துவிடக்கூடாது என தனுஷ் ரசிகர்கள் கருதுவதால், இணையத்தில் குபேரா படத்தின் பின்னணி இசையை நினைத்து, தங்களது கவலையை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இதனால், படத்தின் பின்னணி இசை வேலைகளின்போது தனுஷும் முழுமையாக தனது ஒப்பினியனை தெரிவித்து சிறப்பான பின்னணி இசை அமைக்கச் சொல்லவேண்டும். அதில் கவனமாக இருக்க வேண்டும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

குபேரா படம் இந்த ஆண்டு இறுதியில் குறிப்பாக டிசம்பர் விடுமுறையில் ரிலீஸ் ஆக அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகின்றது. வரட்டும் பார்க்கலாம், இசை எப்டின்னு.!