Meena About Missed Movies

படையப்பா மற்றும் தேவர் மகன் பட வாய்ப்பை தவற விட்டதாக பிரபல நடிகை புலம்பியுள்ளார்.

Meena About Missed Movies : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை மீனா. ரஜினியுடன் குழந்தை நட்சத்திரமாக நடித்த இவர் நாயகியாக வளர்ந்த பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜோடி போட்டும் நடித்து விட்டார்.

பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த மீனா தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகிவரும் அண்ணாத்த திரைப் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி நடிக்க தொடங்கியதில் இருந்து தற்போது வரை நாற்பதாண்டு கால திரையுலக பயணத்தை நிறைவு செய்துள்ளார் மீனா. இந்த நிலையில் இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் படையப்பா மற்றும் தேவர் மகன் உள்ளிட்ட படங்களில் நாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தும் அதனை தவற விட்டு விட்டதாக கவலையுடன் பேசியுள்ளார்.