Master Treat on Vijay Birthday
Master Treat on Vijay Birthday

விஜயின் பிறந்த நாளைக்கு நிச்சயம் ட்ரீட்டு இருக்கு என மாஸ்டர் பட பிரபலம் ஒருவர் கூறியுள்ளார்.

Master Treat on Vijay Birthday : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர்.

விஜய் ரசிகர்களுக்கு வந்த அதிர்ச்சி தகவல்.. ஏப்ரலில் மாஸ்டர் ரிலீசுக்கு வாய்ப்பே இல்ல? – காரணம் இது தான், இந்த லாஜிக்கும் சரியா தான் இருக்கு.!

விஜய்யின் உறவினரான பிரிட்டோ மற்றும் செவன் ஸ்க்ரீன் நிறுவனத்தின் லலித் குமார் ஆகியோர் இந்த படத்தை இணைந்து தயாரித்துள்ளனர்.

விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், சாந்தனு, மாளவிகா, மாளவிகா மோகனன் மற்றும் பலர் இந்த படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.

ஏப்ரல் 9ஆம் தேதி இப்படம் வெளியாக இருந்த நிலையில் கரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இதனால் ரசிகர்கள் இந்தப் படத்தின் டிரெய்லரையாவது வெளியிடுங்கள் என ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்தநிலையில் இப்படத்திற்கு லோகேஷ் கனகராஜ்யுடன் இணைந்து திரைக்கதை அமைத்துள்ள ரத்னகுமார் பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

அஜித்தின் பிறந்தநாள் : நீங்கதான் எங்களுக்கு இன்ஸ்பிரேஷன்.. உருகி உருகி வாழ்த்து சொல்லும் பிரபலங்கள் – யார் யார் என்னென்ன சொல்றாங்க பாருங்க.!

அந்தப் பேட்டியில் விஜய்யின் பிறந்த நாளுக்கு நிச்சயம் மாஸ்டர் படக்குழுவினரிடம் இருந்து ஒரு ட்ரீட் இருக்கிறது. அது டீசராகவோ அல்லது ட்ரைலராகவோ இருக்கலாம்.

ஆனால் அதற்குள் இந்த நிலை மாற வேண்டும் என கூறியுள்ளார். இதனால் நிலைமை சீரானால் தான் டீசர் அல்லது ட்ரைலர் வெளியாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.