Master Release Date
ஏப்ரலில் மாஸ்டர் திரைப்படம் வெளியாக வாய்ப்பே இல்லை என தகவல்கள் கசிந்துள்ளன. அதற்கான காரணம் என்ன என்பதும் தெரிய வந்துள்ளன.

Master Release Latest Update : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் இசை வெளியீட்டு இன்று மாலை நடைபெற உள்ளது. சன் டிவியில் 6.30 மணி முதல் நேரடியாக ஒளிபரப்பாக உள்ளது.

இந்நிலையில் தற்போது திட்டமிட்டபடி ஏப்ரலில் மாஸ்டர் படத்தை ரிலீஸ் செய்ய வாய்ப்பே இல்லை என்பது போல தகவல்கள் கசிந்து வருகின்றன.

உங்களை எதிர்த்த சீமானையே மாத்திடீங்க தலைவா.. ராகவா லாரன்ஸ் அதிரடி அறிவிக்கை.!

படம் நிச்சயம் வெளியாகும் என படக்குழு சொன்னாலும் அது படத்தின் ப்ரோமோஷனுக்காக தான் இருக்கும் என கூறப்படுகிறது.

சரி படம் தள்ளி போவதற்கான காரணம் என்னனு பார்க்கலாம் வாங்க. கொரானா வைரஸ் உலக நாடுகளை மட்டுமில்லாமல் தற்போது இந்தியாவை பாதிப்புள்ளாக்கி வருகிறது.

ஹரிஷ் கல்யாணுக்கு இன்னொரு சக்ஸஸ் பார்சல் – தாராள பிரபு விமர்சனம்.!

இதனால் உலக நாடுகள் பலவற்றில் தியேட்டர், மால், ஸ்கூல்ஸ், காலேஜ் என பெரும்பாலான நிறுவனங்களை குறிப்பிட்ட காலத்திற்கு மூடியுள்ளன.

இந்தியாவிலும் கர்நாடகா, தெலுங்கானா, கேரளா போன்ற மாநிலங்களில் கொரானாவின் தாக்கம் அதிகம் இருப்பதால் அங்கும் இதே நிலைமை தான்.

மாஸ்டர் படமோ வெறும் இந்தியாவில் மட்டும் ரிலீஸாக போவதில்லை. நிச்சயம் ஓவர்சீஸ் நாடுகளிலும் ஒரே நாளில் தான் ரிலீசாகும்.

2021-ல் நான் தான் CM.. ரஜினியின் அரசியலை கலாய்த்த வடிவேலு – ட்ரெண்டிங்கில் தட்டி தூக்கும் நெட்டிசன்கள்.!

ஓவர்சீஸ் நாடுகளில் தற்போது படத்தை ரிலீஸ் செய்ய வாய்ப்பில்லை, இந்தியாவிலும் அனைத்து இடங்களிலும் ரிலீஸ் செய்ய வாய்ப்பில்லாத காரணத்தால் படம் நிச்சயம் தள்ளி போகும் என விவரம் அறிந்தவர்கள் முணுக்கின்றனர்.

இதனால் கொரானாவின் தாக்கம் குறைந்தால் தான் மாஸ்டர் ரிலீஸுக்கு வழி பிறக்கும் என்கின்றனர். ஆனால் உண்மையில் படக்குழு என்ன திட்டம் போட்டிருக்கிறார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.