Master Release Changes Update
Master Release Changes Update

தயாரிப்பாளர்கள் போர்க்கொடி தூக்கியதால் மாஸ்டர் பட ரிலிஸில் அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.

Master Release Changes Update : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படம் ஏப்ரல் 9ஆம் தேதி வெளியாக இருந்தது. ஆனால் கரோனா வைரஸ் தாக்கம் காரணமாக படத்தின் ரிலீஸ் தள்ளிப் போய்விட்டது.

ஊரடங்கு உத்தரவும் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருவதால் தியேட்டர்கள் திறப்பது இப்போதைக்கு சாத்தியமில்லை என்பது உறுதியாகத் தெரிந்து விட்டது.

அஜித்தை பின்தொடரும் விஜய், தளபதியின் கொரானா நிதியால் திடீரென ட்ரெண்ட்டாகும் ஹாஸ்டேக் – காரணம் என்ன?

மேலும் கொரானா தாக்கம் குறைந்து தியேட்டர்களை திறந்தாலும் மக்களின் கூட்டம் எதிர்பார்த்தபடி இருக்குமா என்பதும் மிகப் பெரிய கேள்விக்குறியாகவே இருக்கிறது.

இதனால் படத்தை வாங்கிய தயாரிப்பாளர்கள் எம்ஜி முறையில் இப்படத்தை வெளியிட முடியாது என போர்க்கொடி தூக்கியுள்ளனர். இதனால் தளபதி விஜய்யும் வேறு வழியில்லாமல் டிஸ்ட்ரிபியூட்டர் முறையில் வெளியிட ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது.

எம்ஜி முறை என்றால் லாபமோ நஷ்டமோ எதுவாக இருந்தாலும் அது விநியோகிஸ்தரை சேரும். டிஸ்ட்ரிபியூட்டர் முறை என்றால் லாபம் நஷ்டம் எதுவாக இருந்தாலும் அது தயாரிப்பாளரை சேரும் என்பது தான்.

ஒருவேளை மாஸ்டர் நஷ்டத்தை ஏற்படுத்தினால் அதற்கு தான் பொறுப்பேற்றுக் கொள்வதாகவும் தளபதி விஜய் கூறியுள்ளார்.

மாஸ்டர் படம் ரூபாய் 200 கோடிக்கும் அதிகமாக வியாபாரமாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.