Master Quarantine Cartoon Picture
Master Quarantine Cartoon Picture

மாஸ்டர் கார்டுனால் கடுப்பான மாளவிகாவை விஜய் ரசிகர்கள் மாறி மாறி குஷிப்படுத்தி வருகின்றனர்.

Master Quarantine Cartoon Picture : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்க லோகேஷ் கனகராஜ் படத்தை இயக்கியுள்ளார்.

ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்த இப்படம் மே மாதம் ரிலீசாக இருந்த நிலையில் கரோனா வைரஸ் தாக்கம் காரணமாக தள்ளிப்போய் வருகிறது.

தொடைக்கு மேல உடை தன் ஸ்டைலில் கொரானா விழிப்புணர்வு ஏற்படுத்திய மாளவிகா மோகனன் – பல வருடங்களுக்கு முன்பே எப்படி இருந்திருக்கிறார் பாருங்க.!

ஊரடங்கு உத்தரவால் அனைவரும் வீட்டில் இருந்து வருவதால் மாஸ்டர் படக்குழு வீட்டில் இருந்து வருவது போல கார்ட்டூன் புகைப்படம் ஒன்று உருவாக்கப்பட்டது.

இந்த புகைப்படத்தில் மாளவிகா மோகனன் கிச்சனில் இருப்பது போல இருந்தது அவரை கடுப்பேற்றி இருந்தது. பெண்களுக்கு எப்போதும் விடிவே இல்லையா கிச்சனில் தான் இருக்க வேண்டுமா என அவர் கோபப்பட்டு இருந்தார்.

இதனையடுத்து ரசிகர் அந்த கார்ட்டூனை மாற்றி அமைத்து இருந்தார். மாற்றி அமைக்கப்பட்ட வெர்ஷனில் மாளவிகா மோகனன் புத்தகம் படித்திருந்தார். இது ஓரளவுக்கு அவரின் கோவத்தை தணிய செய்தது.

இந்த நிலையில் தற்போது இதே கார்ட்டூன் புகைப்படத்தை வைத்து இன்னொரு வெர்ஷன் வெளியிடப்பட்டுள்ளது. இதில் மாளவிகா மோகனன் காட்டு விலங்குகளை புகைப்படம் எடுக்கிறார்.

இந்த வெர்ஷன் புகைப்படத்தை பார்த்த மாளவிகா இது இன்னும் அழகாக இருக்கிறது. எனக்கு காட்டு விலங்குகள் என்றால் மிகவும் பிடிக்கும் என கூறி இந்த கார்ட்டூனை உருவாக்கிய ரசிகருக்கு நன்றி கூறியுள்ளார்.