Master Bike Stunt Video
Master Bike Stunt Video

மாஸ்டர் படத்தில் பைக் ஸ்டண்ட் வீடியோ என வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Master Bike Stunt Video : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர்.

இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க விஜயின் உறவினரான பிரிட்டோ தயாரித்துள்ளார். மேலும் அவருடன் இணைந்து செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் லலித் குமாரும் தயாரித்துள்ளார்.

மாஸ்டர் சென்சார், ரன்னிங் டைம் குறித்து படக்குழு கொடுத்த விளக்கம்

ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தில் மாசான பைக் சேசிங் சீன் ஒன்று இருப்பதாக இப்படத்தில் எடுத்துள்ள ஆண்ட்ரியா கூறியிருந்தார்.

இப்படியான நிலையில் பைக் ஸ்டண்ட் சீன் ஒன்றை எடுக்கும் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ சமூக வலைதளத்தில் லீக் ஆகி வைரலாகி வருகிறது.

நானும் வெறித்தனமான வெயிட்டிங் மாஸ்டர் டிரைலர் குறித்து பேசிய பிரபல நடிகர் – யார்?? என்ன சொல்லி இருக்கார் பாருங்க!

இது மாஸ்டர் படத்தின் வீடியோ என கூறப்பட்டு வருகிறது. ஆனால் படக்குழுவினரிடம் இதுகுறித்து விசாரித்த போது இது மாஸ்டர் படத்தின் வீடியோ அல்ல இப்படி ஒரு காட்சியை நாங்கள் எடுக்கவே இல்லை என அவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

https://twitter.com/Naveen82063723/status/1268480883578638336?s=19