Master movie censored
Master movie censored

மாஸ்டர் படத்தின் சென்சார் மற்றும் ரன்னிங் டைம் குறித்து படக்குழு விளக்கம் அளித்துள்ளது.

Master movie censored : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். பாக்ஸ் ஆபிஸ் கிங்காக வலம் வரும் இவரது நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தற்போது மாஸ்டர் என்ற திரைப்படம் உருவாகியுள்ளது.

மாஸ்டர் ரிலீசுக்கு நாள் குறித்தது படக்குழு.. இந்த இரண்டு தேதியில் ஒன்று உறுதி – இதோ அட்டகாசமான அப்டேட்

விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு மற்றும் பலர் இணைந்து நடித்துள்ளனர்.

ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் மே மாதமே ரிலீஸ் ஆக இருந்த நிலையில் ஊரடங்கு உத்தரவு காரணமாக தள்ளிப் போனது.

இதனை அடுத்து படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்ததைத் தொடர்ந்து மாஸ்டர் படத்தின் எடிட்டிங் வேலைகள் தொடங்கின.

இந்த நிலையில் நேற்று இப்படத்தின் சென்சார் பணிகள் நிறைவடைந்து படத்திற்கு யு ஏ சான்றிதழ் கிடைத்திருப்பதாகவும் மேலும் இந்த படத்தின் ரன்னிங் டைம் 181.02 நிமிடங்கள் எனவும் சான்றிதழ் ஒன்று பரவியது.

அண்ணன் திருமாவுக்கு எதிராக திசை திருப்ப வேண்டாம்.. நான் சொன்னதுக்கு அர்த்தம் இது தான் – பா ரஞ்சித்தின் பரபரப்பு பதிவு

ஆனால் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு எதுவும் தெரியாமல் இருந்த நிலையில் இந்தச் சான்றிதழ் உண்மை அல்ல இது முற்றிலும் பொய்யானது என படக்குழு விளக்கம் அளித்து வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

மேலும் படத்தில் எப்படியும் சண்டைக்காட்சிகள் அடிதடி போன்றவை எல்லாம் இருக்கும் என்பதால் இந்த படத்திற்கு யுஏ சான்றிதழ் தான் கிடைக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. எதற்கும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை பொறுத்திருப்போம்.