
விதவிதமான கெட்டப்பில் விஷால் கலக்க சிலுக்கு என்ட்ரியுடன் ரசிகர்களை குஷியாக்கி உள்ளது மார்க் ஆண்டனி ட்ரைலர்.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் இருப்பவர் விஷால். வெறும் நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் தொடர்ந்து படங்களை தயாரித்து வருகிறார்.
இந்த நிலையில் தற்போது இவரது நடிப்பில் மார்க் ஆண்டனி என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. விஷால் ஆர் ஜே சூர்யா உட்பட இந்த படத்தில் எக்கச்சக்கமான பிரபலங்கள் இணைந்து நடித்து நடித்து வருகின்றனர்.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாக்கியுள்ள இந்த படத்தை வினோத் தயாரித்துள்ளார். ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். செப்டம்பர் 15ஆம் தேதி இந்த படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்த நிலையில் மார்க் ஆண்டனி படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது. விதவிதமான கெட்டப்புகளில் விஷால் கலக்க எஸ் ஜே சூர்யாவும் எதார்த்தமான நடிப்பை கொடுத்துள்ளார். அது மட்டுமல்லாமல் இந்த படத்தில் மறைந்த நடிகை சிலுக்குவை திரும்பக் கொண்டு வந்திருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு இன்னும் அதிகரித்துள்ளது. படத்தின் டிரைலரும் 7 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்து வருகிறது.