Mark Antony Movie Review
Mark Antony Movie Review

அஜித், விஜய் என அனைவரது ரசிகர்களையும் கொண்டாட வைத்து வருகிறது மார்க் ஆண்டனி.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஷால். இவரது நடிப்பில் வெளியாகி உள்ள திரைப்படம் மார்க் ஆண்டனி. எஸ் ஜே சூர்யா உட்பட பலர் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க ஆதிக் ரவிச்சந்திரன் இந்த படத்தினை இயக்கியுள்ளார்.

படத்தின் கதைக்களம்:

தன்னுடைய அப்பா தான் அம்மாவை கொன்றான் என்றும் அவன் மிகவும் மோசமானவன் என்றும் ஜாக்கி பாண்டியனை அப்பாவாக நினைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறான் மார்க். இந்த நிலையில் அவன் கையில் டைம் டிராவல் மிஷின் கிடைக்கிறது.

YouTube video


அந்த மிஷின் மூலம் தன்னுடைய அப்பா மிகவும் நல்லவர் என்றும் ஜாக்கி பாண்டியன் தான் அவரை கொன்று அவரை பற்றி சமுதாயத்தில் தவறான பிம்பத்தை உருவாக்கி இருக்கிறான் என்பதையும் தெரிந்து கொள்கிறான். அதன் பின்னர் என்ன ஆனது என்பதுதான் மார்க் ஆண்டனி படத்தின் கதை.

படத்தை பற்றிய அலசல் :

விஷால், எஸ் ஜே என்ன படத்தில் நடித்துள்ள எல்லோரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர்.

படத்தின் இசை மற்றும் ஒளிப்பதிவு படத்திற்கு மேலும் பலம் சேர்க்க ஆதிக் ரவிச்சந்திரன் திறம்பட படத்தை இயக்கியுள்ளார். படத்தில் பல்வேறு இடங்களில் அஜித் ரெபரென்ஸ் இடம் பெற அஜித் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

அதே போல் படக்குழு தளபதி விஜய்க்கு டைட்டில் கார்ட்டில் நன்றி கூறி இருப்பது விஜய் ரசிகர்களையும் கொண்டாட வைத்துள்ளது.

மொத்தத்தில் மார்க் ஆண்டனி மாஸ் ட்ரீட்

REVIEW OVERVIEW
மார்க் ஆண்டனி திரைவிமர்சனம்
mark-antony-movie-reviewடைம் ட்ராவல் பின்னணியில் கேங்ஸ்டர் ஜானர் படத்தை முழுக்க முழுக்க காமெடியாக இருப்பது சிறப்பு.