mari selvaraj upcoming movie update
mari selvaraj upcoming movie update

மாரி செல்வராஜ் இயக்கப் போகும் புதிய படத்தின் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களின் ஒருவராக இருந்து வருபவர் மாரி செல்வராஜ். பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் போன்ற திரைப்படங்களை இயக்கி பிரபலமானார்.

சமீபத்தில் இவரின் இயக்கத்தில் வாழை என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

இந்நிலையில் மாரி செல்வராஜ் தனுஷை வைத்து இயக்கப் போவதாக ஏற்கனவே தகவல் வெளியான நிலையில் அந்த படம் குறித்து மாரி செல்வராஜ் பேசுகையில், இந்தப் படம் சரித்திர படமாக இருக்கும் இது மட்டுமில்லாமல் இந்தப் படம் தொடங்கினால் ஒன்றரை வருடம் ஆகும் முடிய என சொல்லியுள்ளார்.

மேலும் சரித்திர கதை என்பதால் தனுஷ் ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் இந்த படத்திற்காக காத்துக் கொண்டிருக்கின்றனர்.