வித்தியாசமான உடையில் போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் கீர்த்தி திருமண சுரேஷ்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் தமிழில் இது என்ன மாயம், ரஜினிமுருகன், தொடரி, பைரவா, தானா சேர்ந்த கூட்டம் , அண்ணாத்த, மாமன்னன், போன்ற பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.
இவரது நடிப்பில் சுதந்திர தினத்தன்று ரகு தாத்தா என்ற திரைப்படம் வெளியானது. இந்த படம் வெளியாகி மக்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் கீர்த்தி சுரேஷ் அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
அந்த வகையில் தற்போது வித்தியாசமான உடையில் விதவிதமாக போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.