திருமணமானதை மறைப்பதற்கான காரணத்தை சொல்லி உள்ளார் சரண்யா.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியல் முதல் பாகம் முடிந்த இரண்டாம் பாகம் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் மூத்த மருமகளாக தங்கமயில் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சரண்யா.
ஆரம்பத்தில் இவரது நடிப்பு பலருக்கும் புரியாமல் இருந்தது இவர் நல்லவரா? கெட்டவரா? என்ற வகையில் அனைவரும் யோசித்து இருந்தனர். ஆனால் தற்போது அதிலிருந்து கொஞ்சம் மாரி நடித்து வருகிறார்.
அந்த வகையில் தற்போது திருமண வாழ்க்கை குறித்து பேசி உள்ளார் சரண்யா. அதில் திருமண வாழ்க்கை குறித்து சொல்லாமல் இருந்ததற்கு காரணம் என்னுடைய பர்சனல் விஷயத்தை இதுவரை எதையும் சொன்னதில்லை, அதனால் தான் இதையும் சொல்லவில்லை இருந்தாலும் சிலர் புகைப்படம் மற்றும் வீடியோவை பார்த்து கேள்வி கேட்டனர் அதற்கு நான் இல்லை என்றும் சொல்லவில்லை,ஆமாம் என்றும் சொல்லவில்லை. ஆனால் இப்போது எல்லாருக்கும் தெரியும் என் வாழ்க்கையில் என் கணவர் மிகவும் உறுதுணையாக இருந்திருக்கிறார். கடைசி வரை என் ராகுல் எனக்கு துணையாகவே வர வேண்டும் என்று பேசி இருக்கிறார்.
இந்த தகவல் இணையத்தில் வெளியாகிய வைரலாகி வருகிறது.