பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்துள்ளதால் வெங்கட் பிரபு பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் கோட் என்ற திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது.
வெங்கட் பிரபு இயக்கத்திலும், ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். மேலும் சினேகா, பிரசாந்த், யோகி பாபு, லைலா, விடிவி கணேஷ், பிரபுதேவா போன்ற பல பிரபலங்கள் இணைந்து இந்த படத்தில் நடித்திருந்தனர். மேலும் ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு கோட் 25வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐந்தாயிரம் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகி வசூலில் மிரட்டி வரும் கோட் படம் 25 நாட்களாகியும் தொடர்ந்து பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்து வருகிறது.
இதனை கொண்டாடும் விதமாக வெங்கட் பிரபு பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில் கடவுள் இரக்கம் உள்ளவர் என்றும், கோட் படத்தை மெகா பிளாக்பஸ்டர் படமாக கொடுத்த அனைவருக்கும் நன்றி என்று கூறியுள்ளார்.இவர் இணைந்த பதிவை இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.