Manmadha Leelai Movie Review : வெங்கட் பிரபு இயக்கத்தில் அசோக் செல்வன், சம்யுக்தா ஹெக்டே, ஸ்மிருதி வெங்கட், ரியா சுமன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான மன்மத லீலை படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம் வாங்க.

திருமணத்துக்கு மீறிய உறவால் அசோக் செல்வன் என்னென்ன பிரச்சனைகள் சந்திக்கிறார் என்பதுதான் இந்த படத்தின் கதைக்களம். திருமணத்திற்கு முன் பத்தாண்டுகள் மேற்பட்ட ஆண்டுகள் என இரண்டு விதமான காலக்கட்டத்தில் நடக்கும் விஷயங்களை படமாக கொடுத்துள்ளார் வெங்கட் பிரபு.

படத்தை பற்றிய அலசல் : அசோக் செல்வன் திருமணத்திற்கு முன் பின் என இரண்டுவிதமான கதைக்களத்தில் நடிப்பில் வேறுபாடு காட்டி அசத்தியிருக்கிறார்.

சம்யுக்தா மற்றும் ரியா சுமன் என இருவரும் நல்ல நடிப்பை கொடுத்துள்ளனர். இருவருக்கும் கவர்ச்சியான வேடம். ஸ்மிருதி வெங்கட்க்கு சிறிய வேடம் என்றாலும் சிறப்பாக நடித்துள்ளார். ஜெயப்பிரகாஷ் நல்ல நடிப்பை கொடுத்துள்ளார்.

வெங்கட் பிரபு சிறிய கதை என்றாலும் அதனை முடிந்த அளவிற்கு கமர்ஷியலாக சுவாரஸ்யமாக கொடுத்துள்ளார். நான் லீனியர் டைம் லூப் படமாக இந்த படத்தை கொடுத்துள்ளார்.

வெங்கட் பிரபு சிறிய கதை என்றாலும் அதனை முடிந்த அளவிற்கு கமர்ஷியலாக சுவாரஸ்யமாக கொடுத்துள்ளார். நான் லீனியர் டைம் லூப் படமாக இந்த படத்தை கொடுத்துள்ளார்.

பிரேம்ஜியின் இசை படத்திற்கு பலம் சேர்த்துள்ளது. ஒளிப்பதிவு மூலம் காட்சிகளுக்கு உயிர் கொடுத்துள்ளனர்.

தம்ப்ஸ் அப் :

1. அசோக் செல்வன் நடிப்பு

2. விறுவிறுப்பான கதை களம்

3. வெங்கட் பிரபு இயக்கம்

4. இசை

தம்ப்ஸ் டவுன் :

1. மெதுவாக நகரும் முதல் பாதி

REVIEW OVERVIEW
மன்மத லீலை விமர்சனம்
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.
manmadha-leelai-movie-reviewமொத்தத்தில் இளைஞர்கள் கவரும் படமாக மன்மதலீலை இருக்கும்.