கதிர் கொடுத்த ஷாக் ஒரு பக்கம் இருக்க விசாலாட்சிக்கு பதிலடி கொடுத்துள்ளார் ஈஸ்வரி.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் நடக்கப் போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
இந்த வீடியோவில் கதிர் சித்தார்த்துக்கும் அஞ்சனாவுக்கும் ஏதாவது கோவிலில் வச்சு கல்யாணத்தை முடிச்சிடலாம் என்று ஐடியா கொடுக்கிறார்.
இதைத்தொடர்ந்து நந்தினி நேரம் கிடைக்கும்போது பார்த்து எல்லாரும் கிளம்பிடலாம் என்று சொல்ல ஜனனி நான் ஏதாச்சு வழி பண்ணுறேன் என சொல்கிறார்.
பிறகு குணசேகரன் ஈஸ்வரியை பார்த்து கேள்வி கேட்க விசாலாட்சி கட்டினவனுக்கு தவிர வேறு எவனுக்கு கேள்வி கேட்கிற அதிகாரம் இருக்கு என்று கேட்க நான் என்ன கட்டிக்க சொல்லிய உங்ககிட்ட வந்து நின்னு அழுது புலம்பினனா என்று பதிலடி கொடுக்கிறார்.