பிச்சைக்கார வேடத்தில் வீட்டுக்கு வந்துள்ளார் மனோஜ்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மனோஜ் கோவில் வாசலில் உட்கார்ந்து பிச்சை எடுத்துக் கொண்டிருக்க மீனா அதை பார்த்து என்னங்க இது? ஏன் இப்படி இருந்து உட்கார்ந்திருக்கிறீர்கள் என்று கேட்க மனோஜ் அமைதியாக இருக்கிறார்.
உடனே மீனா முத்துவுக்கு போன் போட்டு உடனே கோவிலுக்கு வந்த என்று சொல்லி கூப்பிட என்ன ஏதாவது வேண்டுதல் வச்சுட்டியா என்று முத்து கேட்க இல்லங்க நீங்க உங்க அண்ணா பிச்சை எடுத்துட்டு இருக்காரு என்று சொன்ன முத்து அவன் போய் ஏன் இதெல்லாம் பண்ண போறான்? வேற யாரையாவது பார்த்திருப்ப என்று சொல்ல இல்ல அது உங்க அண்ணன் தான் நீங்களே வந்து பாருங்க என்று சொல்லி போனை வைக்கிறார்.
மறுபக்கம் வீட்டுக்கு வந்த ஸ்ருதி பேங்க்ல தூக்கிப்போட்டு பிஜூ தப்பாக நடந்து கொண்ட விஷயத்தை சொல்ல இதெல்லாம் அந்த முத்துவோட வேலையா தான் இருக்கும் என்று ஸ்ருதியின் அப்பா சொல்கிறார். நீங்க மீனாவ பத்தி தப்பா பேசி இருக்கீங்க அதனால்தான் அவர் உங்கள அடிச்சிருக்கீங்க முத்து பண்ணது தப்புன்னு நீங்க பண்ணதுன்னு தப்புதான் என்று ஸ்ருதி பதிலடி கொடுக்கிறார்.
அந்த பிஜுவை நீங்கதான் வர வச்சிருக்கீங்கன்னு எனக்கு சந்தேகமா இருக்கு நான் ரவியை விட்டு பிரிந்து இருக்கிறது அவனுக்கு எப்படி தெரியும் என்று கேள்வி கேட்கும் சுருதி நான் இங்க வந்தது தப்புதான் நான் இல்லாம ரவி அந்த வீட்டுக்கு போக மாட்டேனு ரெஸ்டாரண்ட்ல தங்கி இருக்கான். நான் கிளம்புறேன் என்று சொல்லி கிளம்பி வருகிறார்.
இங்கு கோவிலுக்கு வந்த முத்து மனோஜை பார்த்து அதிர்ச்சி அடைந்து டேய் அண்ணா என்னடா பண்ணிட்டு இருக்க எழுந்திரு என்று சொல்ல மனோஜ் நான் வரமாட்டேன் 6:00 மணி வரைக்கும் இங்கதான் இருப்பேன் தள்ளுடா ஆளுங்க எல்லாம் போறாங்க என்று அம்மா என்று கத்தி கத்தி பிச்சை எடுக்கிறார். இதெல்லாம் அம்மா பார்த்தா என்ன நினைப்பாங்க என்று கேள்வி கேட்க பக்கத்தில் இருக்கும் பிச்சைக்காரர்கள் அவர் இன்டர்ன்ஷிக்கு வந்திருக்காரு பிசினஸை கத்துக்குக்கிறாரு என்று சொல்கின்றனர்.
அவர் டெய்லி பிச்சை எடுக்கல ஏதோ பரிகாரத்துக்காக வந்திருக்கிறதா சொன்ன மனோஜ் ஆமா நான் பணக்காரன் ஆகுறதை தடுக்காத என்று சொல்கிறார். முத்து மனோஜை எழுப்பி எங்கடா உன் டிரஸ் என்று கேட்க பார்க்கு ஃப்ரெண்ட் வச்சிட்டு இருக்காரு என்று சொல்லி அவருக்கு போன் போட போனை எடுக்காத காரணத்தினால் மனோஜை அப்படியே வீட்டுக்கு கூட்டி வருகின்றனர்.
வீட்டில் அண்ணாமலைக்கு காபி போட்டு கொடுத்துவிட்டு காபி குடித்துக் கொண்டிருக்க மீனா முத்துவும் மனோஜை கூட்டிக்கொண்டு வீட்டுக்கு வருகின்றனர். மனோஜ் முகத்தை மறைத்திருக்க அதை பார்த்த விஜயா பிச்சைக்காரன் எல்லாம் வீட்டுக்கு கூட்டிட்டு வந்து இருக்காங்க என்று சத்தம் போடுகிறார்.
முத்து இது நம்ப மனோஜ் என்று சொல்ல வர காது கொடுத்து கேட்காத விஜய் நம் ஏரியாவுல பிச்சை எடுக்கிறவன் தானே 10, 20 குடுத்து அனுப்ப வேண்டியது தானே அவனை எதுக்கு வீட்டுக்கு கூட்டிட்டு வந்திருக்க என்று சொல்ல மீண்டும் ஐயோ அத்தை அவர் என்று சொல்ல பிச்சைக்காரனை என்னடி அவர் இவர் மரியாதை கொடுத்து பேசிட்டு இருக்க என்று திட்டுகிறார்.
முத்து வார்த்தையை விடாதீங்க பின்னாடி ரொம்ப கஷ்டப்படுவீங்க என்று சொல்ல விஜயா மனோஜ் பார்த்து உனக்கு கை கால் எல்லாம் நல்லா தானே இருக்கு பிச்சை எடுக்கிற? உழைச்சு சாப்பிட மாட்டியா? உன்ன பெத்து வளர்த்து பிச்சை எடுத்து விட்டு இருக்கா பாரு உங்க அம்மா அவளை சொல்லணும் என்று திட்ட மனோஜ் அம்மா என்று சொல்ல விஜயா காது பொத்திக்கொண்டு என்னை அப்படி கூப்பிடாத போடா வெளியே என சத்தம் போடுகிறார். மனோஜ் முகத்திரையை விலக்கி நான்தான் என்று உள்ளே வர விஜயாவும் அண்ணாமலையும் இதை பார்த்து அதிர்ச்சி அடைகின்றனர்.
டேய் மனோஜ் என்னடா இது கோலம் என்று கேட்க மீனா மனோஜ் கோபி வாசலில் உட்கார்ந்து பிச்சை எடுத்துக் கொண்டிருந்த விஷயத்தை சொல்கிறார். முத்து மீனா சொல்லித்தான் நானும் கோயிலுக்கு போனேன் உன்ன பார்க்கும்போது ரொம்ப கஷ்டமா இருந்துச்சு அதனால தான் வீட்டுக்கு கூட்டிட்டு வந்தேன் என்று சொல்கிறார். இவனுக்கு இதெல்லாம் தேவையா என்று திட்ட விஜயா நீ சும்மா இருடா என்று திட்ட நான் சும்மா இருந்திருந்தால் இன்னமும் கோவில் வாசல்ல தான் பிச்சை எடுத்துட்டு இருந்திருப்பான் என்று பஞ்ச் டயலாக் கொடுக்கிறார்.
ரோகிணி வெளியே வந்தது யார் என்று இது பிச்சைக்கார மாதிரி இருக்கும் என்று கேட்க பிறகு அது மனோஜ் எனக்கு தெரிந்து அவரும் அதிர்ச்சி அடைந்து மனோஜை தொட போக முத்து பார்லர் அம்மா கொஞ்சம் பார்த்து இரு அவன் இந்த காஸ்ட்யூமையே பிச்சைக்காரன் கிட்ட இருந்து தான் வாங்கி இருக்கான் என்று சொல்ல ரோகினி தள்ளி செல்கிறார்.
அண்ணாமலை கனடா கோலம் ஏன் இப்படி பண்ண என்று கேட்க கனடாவில் வேலை கிடைச்சிருக்கு நீங்களும் பணம் தர மாட்டேன்னு சொல்லிட்டீங்க அதனால எனக்கு வேற வழி தெரியல என்று சொல்ல அதுக்காக பிச்சை எடுத்து 14 லட்சத்து சேர்த்துவிடலாம் என்று நினைத்தாயா என்று அண்ணாமலை கேட்க இல்லப்பா சாமியார் ஒரு நாள் பிச்சை எடுத்தா நான் நினைச்சது நடக்கும் என்று சொன்னாரு என்று சொல்கிறார். விஜயா உன்ன நான் இந்த கோலத்துலயா பாக்கணும் என அழுகிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.