‘தக் லைஃப்’ படத்தின் கதை என்ன?: வைரலாகும் கணிப்புகள்..
மணிரத்னம் இயக்கியுள்ள ‘தக் லைஃப்’ படத்தின் கதை பற்றிய அப்டேட்ஸ் பார்ப்போம்..
சிம்புவின் நடிப்பில் ‘பத்து தல’ என்ற படம் கடைசியாக வெளியானது. இப்படம் வெளியாகி இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் ‘தக் லைஃப்’ திரைப்படம் வெளியாகவுள்ளது.
படத்தில், கமல் ‘ரங்கராஜா சக்திவேல்’ என்ற ரோலில் நடிக்கின்றார். சிம்பு அமர் என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதாக டிரெய்லரில் காட்டப்பட்டுள்ளது.
கதைப்படி, ரங்கராய சக்திவேல் தன் உயிரை காப்பாற்றிய சிறுவனை தத்தெடுத்து வளர்க்கிறார். தன் பிள்ளையாகவே அந்த சிறுவனை வளர்க்கிறார் ரங்கராய சக்திவேல். அமர் என்ற அந்த பிள்ளை வளர்ந்த பிறகு ஒரு கட்டத்தில், ரங்கராய சக்திவேலுக்கு எதிராகவே திரும்புகிறார்.
இதைத்தொடர்ந்து, ரங்கராய சக்திவேல் மற்றும் அமர் இடையே நடக்கும் மோதல் தான் ‘தக் லைஃப்’ படத்தின் கதை என டிரெய்லரை வைத்து கூறப்படுகிறது. ஆனால், படத்தில் சிம்புவின் கதாபாத்திரத்தில் மிகப்பெரிய ட்விஸ்ட் ஒன்றை மணிரத்னம் வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
டிரெய்லரை பார்க்கும்போது சிம்பு அமர் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என தெரிகின்றது. ஆனால், சிம்பு அமர் இல்லை என்றும், அவரின் ரோலில் ட்விஸ்ட் இருப்பதாகவும் கணிக்கப்படுகிறது.
இந்நிலையில் ‘தக் லைஃப்’ படத்தின் இசை வெளியீட்டு விழா மே 24-ந்தேதி சென்னையில் பிரம்மாண்டமான முறையில் நடைபெறவுள்ளது. அந்நிகழ்ச்சியில் மேலும் படம் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
