கேரளத்து புடவையில் கொள்ளை அழகை காட்டும் போட்டோக்களை வெளியிட்டுள்ளார் மாளவிகா மோகனன்.

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் மாளவிகா மோகனன்.

இந்த படத்தை தொடர்ந்து தளபதி விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடித்தார். அடுத்ததாக தனுஷுக்கு ஜோடியாக மாறன் படத்தில் நடித்த இவர் தற்போது விக்ரமுக்கு ஜோடியாக தங்கலான் படத்தில் நடித்துள்ளார்.

தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வரும் மாளவிகா சமூக வலைதள பக்கங்களிலும் விதவிதமாக போட்டோக்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

அந்த வகையில் தற்போது கேரளத்து புடவையில் விதவிதமாக போஸ் கொடுத்து கொள்ளை அழகை மொத்தமாக காட்டியுள்ளார். இவரது இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகின்றன.