Malavika Mohanan Reaction to Master Meme
Malavika Mohanan Reaction to Master Meme

மாஸ்டர் பட மீம்ஸ் புகைப்படத்தால் மாளவிகா மோகனன் கடுப்பாகி தன்னுடைய கருத்தை பதிவு செய்துள்ளார்.

Malavika Mohanan Reaction to Master Meme : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ் படத்தை இயக்க அனிருத் இசை அமைத்துள்ளார். ஏப்ரல் மாதம் ரிலீசாக வேண்டிய இப்படம் ஊரடங்கு உத்தரவால் தள்ளிப் போய்க் கொண்டே வருகிறது.

தொடைக்கு மேல உடை தன் ஸ்டைலில் கொரானா விழிப்புணர்வு ஏற்படுத்திய மாளவிகா மோகனன் – பல வருடங்களுக்கு முன்பே எப்படி இருந்திருக்கிறார் பாருங்க.!

இதனால் விஜய் ரசிகர்கள் இதனை வைத்து மீம்ஸ் ஒன்றை வெளியிட்டு உள்ளனர். அந்த மீம்ஸ் புகைப்படத்தில் விஜய் ஹாயாக பாட்டு கேட்கிறார். அனிருத் மியூசிக் போடுகிறார். விஜய் சேதுபதி விளையாடிக் கொண்டிருக்கிறார்.

ஆனால் மாளவிகா மோகனன் கிச்சனில் சமைத்துக் கொண்டு இருக்கிறார். இதனைப் பார்த்த மாலு பெண்கள் என்றால் எப்போதும் சமையலறையில் தான் கிடக்க வேண்டுமா.? இதெல்லாம் எப்போ தான் ஒழியுமோ என கருத்து தெரிவித்துள்ளார்.

இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியாகி இதனை விமர்சிக்க மாளவிகா மோகனன் இந்த பதிவை நீக்கியுள்ளார்.

இருப்பினும் அதன் ஸ்கிரீன்ஷாட் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி கொண்டிருக்கிறது.

Malavika Mohanan Reaction to Master Meme
Malavika Mohanan Reaction to Master Meme