Mahavir Karna Movie Update
Mahavir Karna Movie Update

விக்ரமின் பிரமாண்ட திரைப்படமான மகாவீர் கர்ணா என்ற படம் கைவிடப்பட்டதாக வெளியான தகவலுக்கு படக்குழு விளக்கம் அளித்துள்ளது.

Mahavir Karna Movie Update : தமிழ் சினிமாவின் திறமையான நடிகராக வலம் வருபவர் விக்ரம். இவர் தற்போது அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கோப்ரா, மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன், கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் Chiyaan 60 உள்ளிட்ட படங்களை தன் கைவசம் வைத்துக் கொண்டுள்ளார்.

மேலும் இவர் ரூபாய் 300 கோடி பட்ஜெட்டில் உருவாகும் பிரமாண்டமான திரைப்படமான மகாவீர் கர்ணா என்ற படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். கடந்த வருடம் தோன்றிய இப்படம் ஒரு சில நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு நடந்துள்ளது.

அதன் பின்னர் கோப்ரா பொன்னியின் செல்வன் என தொடர்ந்து பிசியாக விக்ரம் இருந்து வருவதால் படப்பிடிப்பை நடத்த முடியாமல் இருந்துள்ளது. இதனால் இப்படம் கைவிடப்பட்டதாக கூறப்பட்டது.

நடிகர் தனுஷிற்கு இவ்வளவு பிரம்மாண்டமான சொந்த வீடா?? ஐஸ்வர்யா தனுஷ் வெளியிட்ட புகைப்படங்கள்!

மேலும் சமீபத்தில் இப்படத்தின் இயக்குனரான ஆர் எஸ் விமல் தன்னுடைய அடுத்த படத்தை அறிவித்திருந்தார். இதனால் மீண்டும் மகாவீர் கர்ணா கைவிடப்பட்டது என பேச்சு கிளம்பியது.

இந்த நிலையில் தற்போது படக்குழு இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளது. அதாவது மகாவீர் கர்ணா திரைப்படம் கைவிடப்படவில்லை. விக்ரம் கைவசம் உள்ள படங்களை முடித்த பிறகு இப்படம் தொடங்கும் என அறிவித்துள்ளனர்.