நாளை திருமணமாக உள்ள நிலையில் தன்னுடைய காதலி பற்றி பதிவிட்டுள்ளார் மஹத்.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் மஹத், சிம்புவின் நெருங்கிய நண்பரான இவர் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் கலந்து கொண்டு பிரபலமானார்.
மேலும் மஹத் பிராச்சி என்பவரை காதலித்து வருவதும் இவர்களுக்கு நிச்சயம் முடிந்துள்ள நிலையில் நாளை திருமணம் நடைபெற உள்ளது.
இந்த நிலையில் மஹத் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் உன்னுடன் இருந்த ஒவ்வொரு நாளையும் மகிழ்ச்சியாக கழித்தேன். எதிர்காலத்திற்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறேன் என உருக்கமாக பதிவிட இந்த பதிவு தீயாக பரவி வருகிறது.
ரசிகர்களும் மஹத்திற்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.