Maharshi Movie
Maharshi Movie

Maharshi Movie : அட்லி இயக்கத்தில் விஜய் மூன்றாவது முறையாக நடித்துவரும் படம் தளபதி 63.

கால் பந்தாட்டத்தை மையப்படுத்தி உருவாகி வரும் இப்படத்தில் விஜய்யுடன் நயன்தாரா, விவேக், ஜாக்கி ஷெராப், கதிர், யோகி பாபு என ஒரு நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்து வருகிறது.

விஜய், விக்ரமை ஒரே படத்தில் இணைக்கும் ஷங்கரின் மாஸ்டர் பிளான் – எது உண்மை?

இதன் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. இதைதொடர்ந்து விஜய் நடிக்கும் அடுத்த படம் பற்றிய எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

இந்த சூப்பர்ஸ்டாரின் படத்தை ரீமேக் செய்கிறாரா விஜய்? வெளிவந்த உண்மைத் தகவல்!

இந்த நிலையில் தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபு நடிப்பில் கூடிய விரைவில் வெளிவரவிருக்கும் மகரிஷி படத்தை விஜய் ரீமேக் செய்யபோவதாக ஒரு செய்தி வைரலாக பரவியது.

என்.ஜி.கே படத்தில் இணைந்த இன்னொரு மிகப்பெரிய பிரபலம் – அதிரவைக்கும் கூட்டணி!

ஆனால் அதை விஜய் தரப்பு திட்டவட்டமாக மறுத்துள்ளனர். மேலும் விஜய் தனது அடுத்த படம் குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை என்றும் அவர் கூறுகின்றனர்.