இரண்டாவது திருமணம் குறித்து பரவும் தகவல்.. மாதம்பட்டி ரங்கராஜ் ஓபன் டாக்..!
இரண்டாவது திருமணம் குறித்து பரவி வரும் தகவலுக்கு மாதம்பட்டி ரங்கராஜ் பதிலளித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் மெஹந்தி சர்க்கஸ் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் மாதம்பட்டி ரங்கராஜ். அதனைத் தொடர்ந்து பெண்குயின் என்ற படத்தில் நடித்திருந்தார்.
தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று மக்கள் மத்தியில் பிரபலமானார்.
இவருக்கு திருமணம் ஆகி இரண்டு மகன்கள் இருக்கும் நிலையில் சமீபமாக பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா மாதம்பட்டி ரங்கராஜ் அவரது காதலர் என்று இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு இருந்தால் இதனால் மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் செய்யப் போவதாக தகவல் நிலையத்தில் வெளியாகி இருந்தது.
தற்போது இதற்கு மாதம் பட்டி ரங்கராஜ் விளக்கம் கொடுத்துள்ளார். அதாவது என் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து வலம் வரும் செய்திகள் எனக்கு நன்றாக தெரியும்.என் குடும்பத்தில் எந்த பிரச்சனையும் இல்லை என் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து நான் பொது இடங்களில் பேச விரும்பவில்லை. அவ்வாறு பேச வேண்டிய சூழ்நிலை வந்தால் கண்டிப்பாக நான் அதற்கு பதில் அளிப்பேன் என்று கூறியுள்ளார்.
இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
