நந்தினியுடன் ரொமான்ஸ் பண்ணும் சூர்யா, அர்ச்சனா போட்ட திட்டம், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா, அ. சுரேஷ்பாபு தயாரிக்கிலும் ஒரு அழகான கிராமத்து கதைக்களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

moondru mudichu serial today promo update 05-03-25
நேற்றைய எபிசோடில் நந்தினியின் தாலிச் செயின் சூர்யாவின் சட்டையில் மாட்டிக்கொள்ள நந்தினி எடுத்து விடுகிறார். மறுபக்கம் விவேக் நண்டு வேலை செய்ய ஆரம்பிக்குது என்று சொல்லி விஜி விஜி என கூப்பிட்டும் எழுந்திருக்காமல் அசந்து தூங்கி விடுகிறார். விவேக் என்ன செய்வது என தெரியாமல் இங்கும் அங்கும் நடந்து கொண்டு இருக்கிறார். மறுநாள் காலையில் விஜி மற்றும் விவேக் இருவரும் பேசிக் கொண்டு வருகின்றனர் நைட்ல நான் கொஞ்ச நேரம் எழுந்தேன் அப்போ நீங்க இல்ல எங்க போயிருந்தீங்க என்று கேட்கிறார். நான் எழுப்பும்போது எழுந்திருக்கல நான் இல்லாத போது முழிச்சுக்கிட்டியா என்று கேட்டு நண்பன் என்ன பண்ணிக்கிட்டு இருப்பான் என்று சொல்லி சூர்யா ரூமுக்கு வருகின்றனர்.
ரூம் திறந்து இருப்பதால் கதவைத் திறந்து உள்ளே வர இவங்க என்ன தனித்தனியா தூங்கிக்கிட்டு இருக்காங்க என்று சொல்லி எழுப்பி விடுகிறார். என்ன நடந்துச்சு என்று தெரிஞ்சுக்க ஆர்வமா இருந்துச்சு எழுந்து சொல்லுடா என்ற எழுப்புகிறார். விஜி நந்தினியை எழுப்பி கால் வலி எப்படி இருக்கு என்று கேட்க இப்போ பரவால்ல குறைஞ்சிருக்கு என்று சொல்லுகிறார். நல்ல வேளை தைலம் கொடுத்தீங்க என்று சொல்ல தைலத்தினால் சரி ஆகல தேய்த்துவிட்ட கை அப்படி என்று சொல்லுகிறார். அட நீ வேறமா அந்த எண்ணெயை வேற நான் கண்ணுல வச்சுட்டு நைட் எல்லாம் தூக்கம் வரல என்று சொல்லுகிறார். விஜி கால் நல்லா ஆயிடுச்சா என்று தொட்டு பார்க்க காலில் ஒரு கொலுசு இல்லாததை பார்க்கிறார்.
ஐயோ தெரியலையே என்ற பதறிப்போய் நால்வரும் ரூமில் தேடுகின்றனர். எங்கும் கிடைக்காததால் விவேக் கேம்ப் ஃபயர் போட்ட இடத்துல மிஸ் ஆயிருக்குமோ என்று சொல்ல நந்தினி இங்கு இல்லனா வெளியே தான் இருக்கும் என்று சொல்லுகிறார். சூர்யா பரவால்ல விடுடா இது இல்லன்னா என்ன நம்ம புதுசு வாங்கிக்கலாம் நந்தினி என்று சொல்ல இல்லை சார் இது என் தங்கச்சி வாங்கி கொடுத்தது என்று வருத்தப்பட சரி வாங்க வெளியே போய் தேடலாம் கிடைச்சிடும் என்று கிளம்ப, விஜி சூர்யாவின் கையில் இருக்கும் கொலுசை பார்த்து நிற்க வைக்கிறார்.
உடனே விவேக் கிண்டல் அடிக்க அதெல்லாம் ஒன்னும் இல்ல இது எப்படி வந்துச்சு என்று சூர்யா யோசித்துப் பார்க்கிறார் அப்போது நந்தினியை படுக்க வைக்கும் போது அவர் காலுக்கு பெட்ஷீட் போட்டு விட அப்போது பெட்ஷீட் மேலே கொலுசு இருப்பதை கவனித்த சூர்யா நந்தினிக்கு போட்டுவிட முயற்சி செய்யும்போது அவரது கையிலேயே மாட்டிக்கொள்கிறார். பிறகு அப்படியே தலையணையை எடுத்துக் கொண்டு வந்து சேரில் உட்கார்ந்து தூங்கி விடுகிறார். உடனே சரி விடு ரொம்ப யோசிக்காத மச்சான் என்று சொல்லுகிறார். நீ எனக்கு போட்டு விட்டாயா நந்தினி என்று சொல்ல நான் ஏன் போடப்போறேன் என்று கேட்கிறார். உடனே விஜி விவேக்கிற்கு சைகை காட்ட இருவரும் கிண்டல் அடிக்கின்றனர். அவங்க சந்தோஷமா இருந்தா போதும் அவங்க ரெண்டு பேரும் தனியா பேசிகிட்டு இருக்கட்டும் வாங்க என்று கூட்டிச் சென்று விடுகிறார்.
அவங்க நம்மள பார்த்து ஒரு மாதிரியா சிரிச்சு பேசிட்டு போறாங்க அதுக்கு அர்த்தமே வேற என்று சொல்லுகிறார். அவங்க என்ன நினைக்கிறாங்க என்று கேட்க, நீங்க போய் அவங்ககிட்ட அப்படியெல்லாம் எதுவும் இல்லைன்னு போய் சொல்லுங்க என்று சொல்லுகிறார். நான் என்ன சொல்லணும் என்று கேட்க நீங்க ஒன்னும் சொல்ல வேணாம் நானே போய் சொல்லிக்கிறேன் என்று வெளியில் போகிறார். விவேக் மற்றும் நந்தினி இருவரும் நம்ம நினைச்சது நடந்துடுச்சு என்று சந்தோஷமாக பேச, நந்தினி வந்து பக்கத்தில் உட்கார்ந்து நீங்க முதலில் வந்த போது சிரிச்சீங்கல்ல, நீங்க சிரிச்சதுக்கு அர்த்தம் என்னன்னு எனக்கு தெரியும் ஆனா அது மாதிரி எதுவும் நடக்கல என்று சொல்லுகிறார். என் கொலுசு அவர் கைக்கு எப்படி போச்சுன்னு தெரியல, உடனே விஜி இப்ப என்ன நாங்க நினைச்ச மாதிரி எதுவும் இல்ல அப்படித்தானே என்று சொல்ல ஆமாம் என்று நந்தினி சொல்லுகிறார். உடனே விஜியும் நம்ம நெனச்ச மாதிரி இல்லையாங்க என்று சொல்லி மீண்டும் கிண்டல் அடிக்க, சூர்யா வந்தவுடன் விவேக் பாட்டு பாடுகிறார். நந்தினி காலில் இருக்கும் கொலுசு உன் கைக்கு எப்படி வந்தது என்று விவேக் கேட்கிறார். அது அப்படி அப்படி என சொல்ல சத்தியமா உன்ன கொல்லப்போறேன் என்று சொல்லுகிறார். எனக்கே எப்படி வந்துச்சுன்னு தெரியல என்று சொல்லுகிறார். விஜி உனக்கு ஒரு விஷயம் தெரியுமா என் பிரண்டு நல்லவன் அதுவும் போதையில் இருந்தா ரொம்ப நல்லவன் என்று சொல்ல, விஜி சிரிக்கிறார்.
இதுக்கு தான் நான் அப்பவே பாய் தலையணை வாங்கி தாங்கன்னு சொன்னேன் நீங்க தான் வாங்கி தரல என்று சொல்ல விஜி இப்ப அதுக்கு என்ன என்று கேட்கிறார்.இப்ப நீங்க தேவையில்லாமல் சந்தேகப்படுறீங்க என்று சொல்ல சூர்யா அண்ணா உன் புருஷன் நீ பொண்டாட்டி இதுக்கு எதுக்கு கூச்சம் என்று சொல்ல இது மாதிரி நீங்க பேசுறீங்க இல்ல என்று சொல்ல உடனே விஜி இதுக்கு மேல நீங்க கிண்டல் பண்ண கூடாது என்று சொல்ல சூர்யாவும் இதுக்கப்புறம் கொலுசு என்று ஆரம்பிக்கக்கூடாது என்று சொல்லுகிறார். மீண்டும் விவேக் வெறுப்பேற்ற பாட்டு பாடிக்கொண்டே இருக்க சூர்யா டென்ஷன் ஆகிறார். உடனே அருணாச்சலம் விவேக்கிற்கு போன் போட்டு சூர்யா என்ன செய்கிறான் என விசாரிக்கிறார். இதனை ரேணுகா மறைந்திருந்து கேட்டுக்கொள்கிறார். நந்தினிக்கு ரெசார்ட் புடிச்சிருக்கா என்று கேட்க, அவ சொந்த ஊர்ல இருக்குற மாதிரியே பீல் பண்றா அங்கிள் என்று சொல்லுகிறார். உடனே ரேணுகா ஓ ரெசார்ட் போய் இருக்காங்களா இந்த வீட்டிலேயே இருக்கோம் நம்மளுக்கு தெரியாம எப்ப போனாங்க என்று யோசிக்கிறார். சரி பார்த்து பத்திரமா இருங்க சந்தோஷமா என்ஜாய் பண்ணுங்க இருந்தாலும் சூர்யா மேல ஒரு கண்ணு இருக்கட்டும் என்று சொல்லி எல்லாத்தையும் நான் பார்த்துக்கிறேன் என்று போனை வைக்கிறார் விவேக். அருணாச்சலம் ஐயா யாருக்கும் தெரியாம சூர்யாவையும் நந்தினையையும் ரெசார்ட்டுக்கு அனுப்பி இருக்காரு இதை சுந்தரவல்லி அம்மா கிட்ட சொன்னா பிரளயமே வெடிக்கும் என யோசிக்க உடனே அதைவிட அர்ச்சனம்மா கிட்ட தான் சொல்லணும் என்று முடிவெடுத்து அர்ச்சனாவிற்கு ஃபோன் போடுகிறார்.
இந்த வீட்டில திடீர்னு சூர்யா சாரையும் நந்தினியையும் காணம் எல்லாரும் தேடிக்கிட்டு இருந்தாங்க ஆனா அருணாச்சலம் சார் கோயிலுக்கு போய் இருக்கிறதா சொன்னாரு ஆனா கோவிலுக்கு இல்ல ரெசார்ட்க்கு போயிருக்காங்களாம் என்று சொல்லிவிட்டு, சுந்தரவல்லி அம்மா கிட்ட போட்டு கொடுத்திடவா என்று கேட்க, அதெல்லாம் நான் உனக்கு அப்புறம் சொல்றேன் எந்த ரெசார்ட் என்று தெரியுமா என்று கேட்க, ஏதோ ஏ ஆர் ரெசார்ட் என்று சொன்னார்கள் என்று சொல்ல சரி நான் உன்கிட்ட அப்புறம் பேசுறேன் வை என்று சொல்லி ஃபோனை வைக்கிறார். மறுபக்கம் சூர்யாவும் நந்தினியும் தனியாக நின்று கொண்டிருக்க நீங்க எதுக்கு என் கொலுசு எடுத்து கையில போட்டீங்க என்று சண்டை போடுகிறார். கையில கொலுசு போட்டா சவுண்ட் வரும் உங்களுக்கு தெரியாதா என்று கேட்டுவிட்டு நீங்க என்ன வம்புல மாட்டி விட எதோ பண்ணி இருக்கீங்க அப்போ உன் கால்ல இருக்குற கொலுசை கழட்டி நான் என் கையில மாட்டிக்கிட்டேனா என்று கேட்க அதை தவிர வேறு வாய்ப்பே இல்லை என்று நந்தினி சொல்லுகிறார். நீ கொஞ்சம் கூட யோசிக்க மாட்டியா, அப்ப நீ கூட இதை பண்ணி இருக்கலாம் இல்ல என்று சொல்ல, நான்தான் தூங்கிட்டேன் என்று நந்தினி சொல்லுகிறார். உடனே சூர்யா நீ காலில் கொலுசு போட்டு இருக்கிறதே எனக்கு தெரியாது அப்புறம் எப்படி நான் ஃபுல் போதையில் இருந்தேன் என்று சொல்லுகிறார். மறுபக்கம் அர்ச்சனா இந்த விஷயம் முன்னாடியே தெரிஞ்சி இருந்தா தடுத்து இருப்பேன் ரேணுகா வேற ஒரு நைட் ஃபுல்லா ரூம்ல ஒன்னா இருந்தாங்கன்னு சொல்றா ஒரு வேலை ஏதாவது தப்பா நடந்து இருக்குமா என்று யோசித்து விட்டு உடனே அப்படி எல்லாம் நடந்திருக்காது என அவரே பேசிக் கொள்கிறார் இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.
இன்று வெளியான ப்ரோமோவில் சூர்யாவும் நந்தினியும் ரொமான்ஸ் செய்து கொண்டிருக்க அர்ச்சனா அதே ரெசாட்க்கு வந்து ரொமான்ஸ் பண்றீங்களா நான் என்ன பண்றேன்னு பாருங்க என்று சொல்லுகிறார்.
சூர்யா உன்ன மாதிரி தேவதைகளா இருக்காங்கல்ல அவங்க எல்லாம் தாராளமா தங்க கொலுசு போடலாம் என்று நந்தினிக்கு தங்க கொலுசு காலில் போட்டு விடுகிறார். என்ன நடக்கப் போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

moondru mudichu serial today promo update 05-03-25