பகத்பாசில்-வடிவேலு மீண்டும் இணைந்த ‘மாரீசன்’ பட டீசர் இன்று வெளியீடு; கதை என்ன?
‘மாரீசன்’ பட அப்டேட்ஸ் பார்ப்போம்..
சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில், சுதீஷ் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் மாரீசன். இப்படம் வித்யாசமான ஒரு படமாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். ஏனெனில், மாரி செல்வராஜ் இயக்கத்தில் ‘மாமன்னன்’ படத்தில் இணைந்த வடிவேலு-பகத்பாசில் காம்போ மீண்டும் இப்படத்தில் இணைந்துள்ளனர்.
இப்படம் பற்றி வடிவேலு தெரிவிக்கையில், இது வித்தியாசமான ஒரு படம். குடும்பங்கள் மற்றும் இளைஞர்கள் என அனைவரும் கொண்டாடக்கூடிய படமாக இருக்கும். கண்டிப்பாக விருதுகள் கிடைக்கும்’ என நம்பிக்கையாக பேசியிருந்தார்.
தன்னால் நகைச்சுவை கதாபாத்திரங்களில் மட்டுமல்லாமல், சீரியஸான ரோல்களிலும் நடிக்க முடியும் என மாமன்னன் படம் மூலம் உணர்த்தினார் வடிவேலு. அவ்வகையில் ‘மாரீசன்’ படத்திலும் வடிவேலு சீரியஸான ஒரு ரோலில் நடித்திருப்பார். அதே சமயம் படத்தில் காமெடியும் நிறைந்திருக்கும் என தெரிகிறது.
கதையை பொறுத்தவரையில், தயா என்ற பகத்பாசில்-வேலன் என்ற வடிவேலு ஆகிய இருவரும் நாகர்கோவிலில் இருந்து பொள்ளாச்சி செல்கின்றனர். செல்லும் வழியில் நடக்கும் சம்பவங்களும் திருப்பங்களும் தான் மாரீசன் படத்தின் கதைக்களம் என கூறப்படுகிறது.
ஒரு பீல் குட் ட்ராமா படமாகவும், நகைச்சுவை கலந்த எதார்த்தமான படமாகவும் இருக்கும்.
இந்நிலையில், மாரீசன் படத்தின் டீசர் இன்று மாலை வெளியாக இருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிப்பு வந்துள்ளது. டீசரை பார்க்கும்போது கதை என்ன என்பது மேலும் தெரிய வரலாம். பார்ப்போம்.!
