Maanaadu Team's New Plan
Maanaadu Team's New Plan

மாநாடு திரைப்படம் தொடர்ந்து சிக்கனல் இருந்து வருவதால் படக்குழு புதிய முடிவு ஒன்றை எடுத்துள்ளது.

Maanaadu Team’s New Plan : தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று முன்னணி நடிகராக இடம் பிடித்திருப்பவர் சிம்பு. பன்முகத் திறமை கொண்ட இவர் கடந்த சில வருடங்களாகவே வெற்றிக்காக போராடி வருகிறார்.

ட்ராப்பான மாநாடு படத்தில் திடீர் திருப்பம் – சிம்பு ரசிகர்களுக்கு ஒரு ஹாப்பி நியூஸ்.!

மேலும் பல்வேறு சர்ச்சைகள் சிம்புவை சுற்றிக் கொண்டே இருக்கின்றன. இவற்றையெல்லாம் தாண்டி இவர் வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார்.

கல்யாணி பிரியதர்ஷன், எஸ் ஜே சூர்யா, பாரதிராஜா, எஸ் ஏ சந்திரசேகர், பிரேம் ஜி, கருணாகரன் உள்ளிட்டோர் இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர்.

படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நடந்து முடிந்த நிலையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் அப்படியே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு முடிந்த பின்பும் இந்த படத்தின் படப்பிடிப்புகளை தொடர்வதில் சில சிக்கல்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

ட்ராப்பான மாநாடு படத்தில் திடீர் திருப்பம் – சிம்பு ரசிகர்களுக்கு ஒரு ஹாப்பி நியூஸ்.!

இதன் காரணமாக படக்குழு சிறிய பட்ஜெட்டில் ஒரு படத்தை எடுக்க முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அதிலும் மாநாடு படத்தில் உள்ள அத்தனை நடிகர்களும் சம்பளமில்லாமல் நடிக்க ஒப்புக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

இதனால் சிம்புவின் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.