அரசியலைத் தாண்டி விஜய் புதிய அவதாரம் எடுக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் கோட் படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தை தொடர்ந்து தளபதி விஜய் அடுத்ததாக யாருடைய இயக்கத்தில் நடிப்பார் என்ற எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்கமாக எழுந்துள்ளது.
இந்த நிலையில் விஜயின் அடுத்த படத்தை வினோத் இயக்கப் போவது உறுதி என தெரியவந்துள்ளது. மேலும் தளபதி விஜய் இந்த படத்தை தயாரிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதன் மூலம் இதை தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுக்க போவதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.