Maanaadu Movie Update

மாநாடு படத்தில் பிரபலம் ஒருவர் நடிக்க இருந்ததாக வெளியான தகவலுக்கு படக்குழு விளக்கமளித்துள்ளது.

Maanaadu Movie Update : தமிழ் சினிமாவில் சிறு வயது முதல் இன்று வரை பலரும் பார்த்து ரசித்த ஒரு நடிகர் சிம்பு. இவர் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாக உள்ள மாநாடு திரைப்படத்தில் நடிக்க தயாராகி வருகிறார்.

தளபதி 64-ல் விஜய்க்கு ஜோடி யார்? – வெளியான பக்கா மாஸ் தகவல்.!

இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக இயக்குனர் ப்ரியதர்ஷினின் மகள் கல்யாணி ப்ரியதர்ஷன் நடிக்க உள்ளார். மேலும் ஆக்ஷன் கிங் அர்ஜுன் மிக முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இவர்களை தொடர்ந்து இசையமைப்பாளரும் வெங்கட் பிரபுவின் தந்தையுமான கங்கை அமரன் இந்த படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் ஒன்று வைரலானது.

பிராடு பசங்க, சும்மாவே கிளப்பறாங்க – தளபதி 64 குறித்து பேசிய பிரபல நடிகை.!

ஆனால் வெங்கட் பிரபு இந்த தகவலை மறுத்துள்ளார். அப்பா நடிப்பதாக வெளியான தகவலில் உண்மை இல்லை எனவும் கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.