தெலுங்கில் மாமன்னன் திரைப்படத்தின் டிரைலரை வெளியிட இருக்கும் பிரபலங்கள் குறித்த தகவலை படக்குழு அறிவித்துள்ளது.

தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனராக திகழும் மாறி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, கீர்த்தி சுரேஷ், பகத் பாஸில் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த வாரம் வெளியான மாமன்னன் திரைப்படம் பலராலும் பாராட்டுகளை குவித்து வசூல் வேட்டையாடி திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இதன் வரவேற்பை தொடர்ந்து மாமன்னன் திரைப்படம் தெலுங்கில் “நாயகுடு” (Nayakudu) என்ற பெயரில் வரும் ஜூலை 14ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக நேற்று படக்குழு அதிகாரமும் பூர்வமாக அறிவித்திருந்தது . தற்போது இப்படத்தின் ட்ரெய்லர் வெளியிட்டுருக்கான அப்டேட்டை வெளியிட்டுள்ளது.

அதன்படி, மாமன்னன் படத்தின் தெலுங்கு டிரைலர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாக இருப்பதாகவும் அதனை தெலுங்கு திரையுலகின் முன்னணி பிரபலங்களான இயக்குனர் ராஜமவுலி மற்றும் நடிகர் மகேஷ் பாபு ஆகியோர் வெளியிட இருப்பதாகவும் போஸ்டர் வெளியிட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.