மாமன்னன் திரைப்படம் தெலுங்கில் வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் மாரி செல்வராஜ். இவரது இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, கீர்த்தி சுரேஷ், பகத் பாஸில் உள்ளிட்டோரி நடிப்பில் உருவான மாமன்னன் திரைப்படம் கடந்த வாரம் வெளியானது.

தொடர்ந்து விமர்சனம் ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று பலராலும் பாராட்டுகளை குவித்து வரும் இப்படம் தொடர்பான தகவல்கள் தொடர்ந்து இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வரும் நிலையில் மாமன்னன் திரைப்படம் தெலுங்கில் வெளியாக இருப்பதாக படக்குழு வெளியிட்டு இருக்கும் தகவல் வைரலாகி வருகிறது.

அதன்படி மாமன்னன் திரைப்படம் “நாயகுடு” (Nayakudu) என்ற பெயரில் வரும் ஜூலை 14ம் தேதி திரையரங்குகளீல் வெளியாகிறதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இதனால் உற்சாகமடைந்த ரசிகர்கள் இந்த தகவலை வைரலாக்கி வருகின்றனர்.