சமூக வலைத்தள பக்கத்தில் லாஸ்லியா பகிர்ந்திருக்கும் போட்டோஸ் வைரலாகி வருகிறது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் போட்டியாளர்களின் ஒருவராக கலந்து கொண்டவர் லாஸ்லியா. இலங்கையைச் சார்ந்த ஈழத்துத் தமிழச்சியான இவர் இந்த நிகழ்ச்சிக்கு பிறகு தமிழ் சினிமாவில் வெளியான பிரண்ட்ஸ் என்ற படத்தில் கூகுள் குட்டப்பன் படத்திலும் நடித்தார். தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார்.
மேலும் சமூக வலைதள பக்கங்களிலும் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களையும் பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருவார். அந்த வகையில் நியூ லுக்கில் கவர்ச்சி உடையில் எடுத்திருக்கும் புகைப்படங்களை பதிவிட்டிருக்கிறார். அது தற்போது வைரலாகி வருகிறது.