லியோ படத்தின் செகண்ட் சிங்கிள் குறித்து லோகேஷ் கனகராஜ் கொடுத்த அப்டேட் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்தவர் லோகேஷ் கனகராஜ். தனித்துவமான படங்களை இயக்கி ரசிகர்கள் மத்தியில் LCU என்ற வட்டத்தை உருவாக்கி தனக்கென தனி இடம் பிடித்திருக்கும் இவர் தற்போது தளபதியுடன் இரண்டாவது முறையாக இணைந்து லியோ திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

ஏராளமான உச்ச நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் சமீபத்தில் நிறைவடைந்ததாக படக்குழு ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில் கோவையில் தனியார் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று இருந்த லோகேஷ் கனகராஜ் லியோ படம் குறித்து கொடுத்திருக்கும் அப்டேட் வைரலாகி வருகிறது.

அதாவது, கல்லூரி நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்த லோகேஷ் கனகராஜிடம் மாணவர்கள் லியோ படம் சம்பந்தமான பல கேள்விகளை கேட்டு தெரிந்து கொண்டனர். அப்போது லியோ படத்தின் செகண்ட் சிங்கிள் குறித்த கேள்வியும் கேட்கப்பட்டது. அதற்கு லோகேஷ் கனகராஜ் “லியோ படத்தின் செகண்ட் சிங்கிள் வெளியாக தாமதமாகும். இது வழக்கமான படங்கள் போல் ஃபர்ஸ்ட் சிங்கள் செகண்ட் சிங்கள் என்று கிடையாது. இது கைதி மாதிரியான படம் எனக் கூறி ரசிகர்களின் ஆர்வத்தை அதிகரிக்க செய்து இருக்கிறார். இவரது இந்த தகவலை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.