ரஜினியிடம் சொன்ன கதை வேறு; தற்போது படமாக்கும் கதை வேறு: இயக்குனர் லோகேஷ் வாய்ஸ்..

சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு சொன்ன கதையை லோகேஷ் இயக்காமல், வேறொரு கதையை தற்போது படமாக்குகிறார் என தகவல்கள் வருகின்றன. இது குறித்து விவரம் பார்ப்போம்..
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து “கூலி” என்கிற திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். கன்னடம், தெலுங்கு, மலையாளம் என்று பல திரை உலகை சேர்ந்த முக்கிய நடிகர்கள் இந்த திரைப்படத்தில் நடித்து வருகின்றனர்.
இந்த விஷயம் ஒருபுறம் இருக்க, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு, லோகேஷ் கனகராஜ் முதலில் சொல்லிய கதையை அவர் இப்போது எடுக்கவில்லை என்றும், மாறாக “கூலி” திரைப்படத்தின் கதை, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு, லோகேஷ் கனகராஜ் இரண்டாவதாக சொன்ன கதை என்கின்ற விஷயமும் தெரிய வந்திருக்கிறது.
பிரபல நடிகர் மற்றும் இயக்குனர் சித்ரா லட்சுமணனிடம் மனம் திறந்து பேசிய ஒளிப்பதிவாளர் மனோஜ், பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். அதாவது, ஏற்கனவே ரஜினிகாந்துக்கு சில மாதங்களுக்கு முன்பு, லோகேஷ் சொன்ன கதையை அவர் இப்பொழுது எடுக்கவில்லை. மாறாக வேறு ஒரு கதையை தான் ரஜினியிடம் சொல்லி, அதற்கு அவரும் ஓகே சொல்ல, அந்த கதையைத் தான் இப்பொழுது லோகேஷ் எடுத்து வருவதாக கூறியிருக்கிறார்.
இதற்கு முன்னதாக ரஜினியிடம், லோகேஷ் சொன்ன கதை ஒரு பான் இந்தியன் கதை. அதுமட்டுமல்லாமல் முழுக்க முழுக்க ஐமேக்ஸ் கேமரா கொண்டு அந்த திரைப்படத்தை எடுக்க வேண்டும் என்று அவர் விரும்பினார். ஆனால், மேலை நாடுகளில் கூட இன்னும் அந்த விஷயங்கள் பெரிய அளவில் சாத்தியமாகவில்லை. ஆனால், லோகேஷ் கனகராஜ் அதற்கான அனைத்து திட்டங்களையும் தயாராக வைத்திருந்தது உண்மையிலேயே மெய்சிலிர்க்க வைக்கிறது.
அதுமட்டுமல்லாமல், அது இந்திய அளவில் உள்ள நடிகர்கள் பலரை ஒன்றிணைத்து எடுக்கப்பட வேண்டிய கதை. ஆனால், நேரமின்மை காரணமாக, ஆறு மாதங்களுக்குள் கூலி படத்தை முடிக்க வேண்டும் என்ற கட்டாயம் இருந்ததாலேயே அந்த கதையை விட்டுவிட்டு, தற்பொழுது புதிய கதையை ரஜினிக்கு சொல்லி அதை இப்போது அவர் எடுத்து வருவதாக கூறியிருக்கிறார். ஆனால் அவர் யோசித்து வைத்திருக்கும் அந்த பெரிய கதை நிச்சயம் அவர் விரைவில் எடுப்பார். ஆனால் அதற்கு அதிக காலம் மட்டும் பொருட்செலவு தேவைப்படும்’ என்றும் கூறியுள்ளார்.
ரஜினி சார் யோசித்து வைத்திருக்கும் அந்த பெரிய கதை என்னவாக இருக்கும்.?

lokesh kanagaraj narrated two stories to super star rajinikanth