ரசிகரின் பதிவிற்கு ரிப்ளை கொடுத்துள்ள லோகேஷ் கனகராஜ் மற்றும் கௌதம் மேனனின் பதிவுகள் வைரலாகி வருகிறது.

இந்திய திரை உலகில் தவிர்க்க முடியாத உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து கொண்டிருக்கும் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் கௌதமேனன் இயக்கத்தில் உருவாகி இருந்த வேட்டையாடு விளையாடு திரைப்படம் நீண்ட இடைவேளைக்குப் பிறகு மீண்டும் ரீ ரிலீஸ் ஆகி திரையரங்குகளில் வசூல் வேட்டையாடி மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த நிலையில் ட்விட்டர் பக்கத்தில் ரசிகர் ஒருவர் நடிகர் கமல்ஹாசனின் மிகப்பெரிய ஃபேன் பாய் இயக்குனர் யார் என்ற சண்டையில் முதலிடம் கௌதம் மேனன் தான் என தோன்றுகிறது என்று குறிப்பிட்டு பதிவிட்டு இருக்க அதற்கு “சந்தேகமே வேண்டாம்” என லோகேஷ் கனகராஜ் ரீ-ட்வீட் செய்திருக்கிறார்.

இவர்களது இந்த பதிவை கண்ட இயக்குனர் கௌதம் மேனன் ‘நாயகன் மீண்டும் வரான்’ என விக்ரம் படத்தில் நீங்களும் அவரும் வரும் வரை, நான் அந்த இடத்தில் இருந்தேன். ஆனால் இப்போது அதனை தாண்ட முயற்சிக்க வேண்டும். இது எங்களுக்குள் ஒரு நல்ல போட்டியாக இருக்கும், “ஆனால் இந்த சண்டையில் சட்ட கிழியாது” அன்பு மட்டும்தான் இருக்கும் என இயக்குனர் லோகேஷின் பதிவிற்கு ரிப்ளை கொடுத்திருக்கிறார். இவர்களது இந்த பதிவுகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.