லோகேஷ் இயக்கும் கூலி, கைதி-2 படங்களின் அப்டேட்ஸ்

Web Ads

ரஜினி மற்றும் கார்த்தி திரைப்பட தகவல்கள் காண்போம்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘கூலி’ படத்தின் ஷுட் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத்தின் இசையில் உருவாகும் இப்படம் ஆகஸ்ட் 14-ந்தேதி வெளியாகிறது.

இந்நிலையில் லோகேஷ் ‘கைதி-2’ படத்தின் பணிகளிலும் இறங்கியுள்ளார். முன்னதாக, கார்த்தி நடிப்பில் ஒரே இரவில் நிகழும் சம்பவங்களாக உருவான ‘கைதி’ படம் ரசிகர்களை மிகவும் ஈர்த்து வெற்றி பெற்றது.

இப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில், இதன் இரண்டாம் பாகம் வெளியாக இருப்பதாக சொல்லப்பட்டு வந்தது. ஆனால், லோகேஷிற்கு திடீரென லியோ, கூலி பட வாய்ப்புகள் வந்து விட்டதால், ‘கைதி-2’ படத்தின் வேலைகள் தள்ளிக்கொண்டே சென்றது.

Web Ad 2

இதையடுத்து கடந்த மாதம் கைதி 2 விரைவில் உருவாக இருப்பதாக அறிவிப்பு வந்தது. கைதி-2 படப்பணிகளை லோகேஷ் தொடங்கி விட்டதாக கூறப்படுகிறது. ரஜினியின் ‘கூலி’ ரிலீஸான உடனே கைதி-2 ஷுட்டிங் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

‘கைதி’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை மட்டும் பெறாமல் ஒரு டிரெண்ட் செட்டர் படமாகவும் அமைந்து, அப்படத்தின் சாயலில் பல படங்கள் வரத் துவங்கிவிட்டன. அதனால், கைதி-2 படத்தை திரை ஆர்வலர்களும் எதிர்பார்த்துள்ளனர்.