கார்த்தி நடிக்கும் ‘கைதி-2’ படத்தின் அப்டேட்ஸ்..

Web Ads

லோகேஷ் இயக்கவிருக்கும் ‘கைதி-2’ பட தகவல்கள் காண்போம்..

ரஜினி-கமல் இணையும் படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இல்லை என்பது முடிவாகிவிட்டது. இதனால், அவருடைய அடுத்த படம் குறித்து தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன. பவன் கல்யாண் படம் என்று ஒரு தகவல் இணையத்தில் உலவி வருகிறது.

ஆனால், ‘கூலி’ படத்துக்கு பின்பு ‘கைதி 2’ படத்தை இயக்கவே முடிவு செய்திருந்தார் லோகேஷ் கனகராஜ். அதற்கிடையில்தான் ரஜினி-கமல் இணையும் படத்தை இயக்க பேச்சுவார்த்தை நடைபெற்றது. தற்போது மீண்டும் ‘கைதி 2’ படத்தை இயக்க முடிவு செய்திருக்கிறார். இதற்கான ஆரம்பகட்ட பணிகள் தொடங்கப்பட உள்ளன.

‘கைதி 2’ படத்தினை கேவிஎன் நிறுவனம் மற்றும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கவுள்ளன. தற்போது கார்த்தி நடிக்கும் ‘மார்ஷல்’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். அதனைத் தொடர்ந்து ‘கைதி 2’ படத்தில் கவனம் செலுத்துவார் எனத் தெரிகிறது.

இந்நிலையில், அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நாயகனாக நடித்து வருகிறார் லோகேஷ் கனகராஜ். அப்படத்தினை முடித்துவிட்டு ‘கைதி 2’ படத்தில் கவனம் செலுத்தவுள்ளார்.

lokesh kanagaraj decides to direct kaithi 2 movie
lokesh kanagaraj decides to direct kaithi 2 movie