பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் எல்.ஐ.கே படத்தின் ரிலீஸ் தேதியை வெளியிட்ட படக்குழு.!!

பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் எல்.ஐ.கே படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டு உள்ளது.

lik movie release date update

lik movie release date update

தமிழ் சினிமாவில் இயக்குனர் ஹீரோ என இரண்டிலும் கலக்கி வருபவர் பிரதீப் ரங்கநாதன்.இவரது நடிப்பில் டிராகன் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

அதனைத் தொடர்ந்து தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி என்ற படத்தில் நடித்துள்ளார்.செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் மற்றும் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் இணைந்து இந்த படத்தை தயாரித்து உள்ளது.

அனிருத் இசையில் உருவாகி வரும் இந்த படத்தில் எஸ்.ஜே சூர்யா, கீர்த்தி செட்டி போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் தற்போது ரிலீஸ் தேதி குறித்து அறிவிப்பை வெளியிட்டு உள்ளனர்.

அதாவது இந்தத் திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 18ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்பதை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது. இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்தப் பதிவு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.